Aug 19, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஏசாயா: 62:3

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் எட்டாம் வாதையாகிய வெட்டுக்கிளியை தேவன் அனுப்பினதை குறித்து நாம் தியானித்தோம். ஆனால் அது இந்த நாட்களில் தேவன் தேசங்களிலேயும் மற்றும் மனுஷர் மத்தியிலேயும் அனுப்பி விட்டிருக்கிறதை நாம் பார்க்கவும் உணரவும் முடிகிறது ஆனால் வேத வசனத்தில் இவ்விதமான வெட்டுக்கிளிகள் உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தங்கள் பூமியில் தோன்றிய நாள் முதல் அப்படிப்பட்டவைகளை கண்டதில்லை என்று தேவ வசனம் சொல்லப்பட்டது போல் நம்முடைய பிதாக்களும் நம்முடைய பிதாக்களுடைய பிதாக்களின் காலத்திலும் நிச்சயமாகவே அவர்கள் இப்படிப்பட்டவைகளை கண்டதில்லை என்று கூற முடியும். அதனால் பிரியமானவர்களே இந்த நாட்களை நாம் காண்கிறோமானால் நாம் முந்தின பிதாக்களையும், பிதாக்களின் பிதாக்களை காட்டிலும் தேவனுக்கு விருப்பமற்ற காரியங்களை செய்வதினால் தேவன் நம்மை பலமாய் தண்டிக்கிறார் என்பது உணர முடிகிறது.

இந்த நாட்களில் சம்பவிப்பதை குறித்து ஆபகூக் கண்ட தரிசனம். ஒரு தரிசனத்தை காண்கிறான் அதில் இது எது வரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் இரட்சியாமலிருக்கிறீரே.

இந்த தரிசனத்தின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போதே ஏதோ கொடுமை சம்பவிக்கிறது. ஆனால் தேவனை கூப்பிட்டாலும் அவர் கேட்கவில்லை இது எதுவரைக்கும் என்று கேட்கிறான். அதில் இரட்சிப்பு இல்லை என்பதைக் காட்டுகிறது.                                                                               

அந்த தீர்க்கதரிசக்கு அக்கிரமத்தை காண்பித்து அதன் மூலம் வந்த தீவினையை பார்க்க வைக்கிறார். அதில் பார்க்கும் போது கொள்ளையும் கொடுமையும் எதிரே நிற்கிறது. ஆனால் வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

என்னவெனில் இதன் பொருள் நம் அக்கிரமத்தினிமித்தம் வருகிற தீவினை தேவன் நமக்கு எதிராக வைக்கிறார். இதனால் ஒருவருக்கொருவர் வழக்கையும் வாதையும் எழுப்புகிறார்கள். இதனால் நியாயப்பிரமாணம்  பெலனற்றதாகி நியாயம் ஒரு போதும் செல்லமாற் போகிறது. நியாயபிரமாணம் ஒரு போதும் அழியாதது. இதனை நாம் விட்டு விடுகிறதால் நமக்குள் அக்கிரமம் பெருகுகிறது. நியாயம் செல்லாமல் போகிறது துன்மார்க்கன் நீதிமானை வளைந்துக் கொள்கிறான். நியாயம் புரட்டப்படுகிறது.

கர்த்தர் சொல்வது நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.

ஆபகூக்: 1:6-10

இதோ நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.

அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.

அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.

அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.

அவர்கள் ராஜாக்களை ஆகடியம் பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.

இவ்விதமாக ஒரு ஜாதியை மிகவும் வேகத்தில் பரவ செய்கிறார். இதனை கர்த்தர் நடப்பிக்கிறார். என்பது நிச்சயம். ஆனால் துவக்கத்தில் நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும் போது தேவன் நம் கூப்பிடுதலை கேட்காவிட்டாலும் அந்த ஜாதி தான் பெலன் உண்டானது என்று சொல்லி மிஞ்சி போல் தேவனுக்கு முன்பாக குற்றவாளியாவான் என்று தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் ஆபகூக் கண்ட தரிசனம் கர்த்தர் சொல்கிறார்.

ஆபகூக்: 2:3,4

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.

இதோ அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

பிரியமானவர்களே, இந்த தரிசனம் குறித்த காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கிறது அது பொய்யல்ல அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு அது நிச்சயமாய் வரும் என்று தேவன் நம் ஒவ்வொருவரிடமும் பேசுகிறார். இந்த தரிசனம் ஆத்துமா அகங்காரமாயிருக்கிறவர்களுக்கு சம்பவிக்கும். மேலும் இவ்விதம் ஒரு காரியம் நடக்கிறது என்றால் அந்த பலத்த ஜாதி (தேவனால் அனுப்பப்படுகிறது) ஆனால் ராஜாக்களை பார்த்து ஆகடியம் பண்ணும் என்றும் அதிபதிகள் அவர்களுக்கு பரியாசமாயிருப்பார்கள்.

இப்போது நடந்துக் கொண்டிருக்கிற காரியங்களை நாம் ஒன்று சிந்திக்க வேண்டும் என்னவென்றால் யாராலும் ஒரு முடிவுக்குள் வர முடியாத ஒரு காரியமாக இருக்கிறது. (கொள்ளை நோய்) அதனால் அந்த ஜாதி எல்லோரையும் பரியாசம் பண்ணும்.

தேவனுடைய ஜனமே, நம் விசுவாசம், நம்மை இரட்சிக்கும். தேவன் சொல்லுகிறார் அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல, தன் விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.

எப்படியெனில் நம் ஆத்துமா செம்மையாக இருக்குமானால் இந்த நியாயத் தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இவற்றிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் எல்லோரும் தேவனிடத்தில் மனந்திரும்ப வேண்டும். முதலில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னதமான தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும். அவ்விதம் கிறிஸ்துவை விசுவாசித்து நம் பாவ சாபம், ரோகம் எல்லாவற்றிற்க்காகவும் மரித்தார் என்றும் கிறிஸ்து மரித்த கிறிஸ்து உயிர்ப்பிக்கப் பட்டு நம் எல்லா ஆத்துமாவையும் உயிர்ப்பிக்கிறார் என்று முழு மனதோடு விசுவாசித்தால் அனுதினம் அவர் கற்பனை, கட்டளை, நியாயப்பிரமாணம் ஒன்றிலும் தவறாமல் நம் உள்ளத்தில் அவரை ஏற்றுக் கொண்டு நம் ஆத்துமாவில் அவருடைய ஜீவன் பிரகாசிக்கும் படியாக நம் இருதயம் திறந்து அவரை மகிமைப்படுத்துவோமானால் நாம் இரட்சிக்கப்படுவோம். இவ்விதமாக மனந்திரும்புவோம். வெட்டுக்கிளியாகிய வாதையிலிருந்து தப்பித்து கொள்வோம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.