நம் உள்ளத்தில் ஜீவத் தண்ணீர் ஓடுதல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 17, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 100:2

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 நம் உள்ளத்தில் ஜீவத் தண்ணீர் ஓடுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளும் நாம் தியானித்த வேத பகுதியில் எகிப்தில் மாத்திரமல்ல இஸ்ரவேலின் வாதை புரண்டு வருகிறதை குறித்து நாம் தியானித்தோம். பொய் என்னும் அடைக்கலத்தை கல்மழை அழித்து விடும். நம் உள்ளத்தில் சத்தியத்திற்கு மாறாக நடப்போமானால் கல்மழை என்கிற வாதை தேவன் அனுப்புகிறார்.

மேலும் சீனாய் மலையில் எழுந்தருளி இஸ்ரவேலருக்கு நியாயத்தீர்ப்பினால் பயமுண்டாக்கி நம் இதயம் திறந்து ஆத்துமாவின் உயிர்ப்பை தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். அங்கு கன்மலை கிறிஸ்தும், கிறிஸ்துவின் மூலம் நமக்கு ஆத்தும மீட்பு உண்டு என்பதையும் தேவன் திருஷ்டாந்தத்தோடு விளக்கிக் காட்டி நம் உலகில் கிறிஸ்துவை அனுப்பி அவரை தேவன் தம்முடைய ஆவியினால் உயிர்த்தெழ வைத்து உள்ளான சரீர மீட்பை தேவன் நமக்கு குமாரனுடைய ஆவியை நமக்குள் அனுப்பி நம் ஆத்துமாவை உயிர்ப்பித்து அனுதினம் அவருடைய ஆகாரத்தை நமக்கு தந்து நமக்குள்ளாக ஆத்துமாவின் பெலன் தந்து நம்மை திருப்தியடைய செய்கிறார். இவ்விதம் கன்மலையின் மேல் போடுகிற அஸ்திபாரம் உறுதியானது. இவ்விதம் கன்மலையின் மேல் போடுகிற அஸ்திபாரம் போட்டவர்கள் அநியாயத்தை விட்டு விலக வேண்டும் என்பது அதற்கு முத்திரையாயிருக்கிறது.

II தீமோத்தேயு: 2:19-21

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

இவ்விதமாக உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்க வேண்டுமானால் நாம் மேற்கூறிய  வசனங்கள் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும்.

கர்த்தர் எகிப்தின் கிரியைகள் இஸ்ரவேலரிடத்தில் இருக்குமானால் இஸ்ரவேலருக்குள்ளும் வாதையை அனுப்புகிறார். அன்றியும் நம் ஆத்துமா பாவத்தினின்று மீண்டு எடுக்கும்படியாகவும் இவ்விதம் வாதைகளை அனுப்புகிறார்.

இஸ்ரவேலருக்குள் வாதைகளை அனுப்பி உணர்வடைந்து இருதயம் பரிசுத்தமாக்கப்படுகிறது. இதிலிருந்து நாம் பரிசுத்த படுவதகாகவே இதை அனுப்புகிறார். அப்போது நாம் தேவனுக்கு பரிசுத்த ஆராதனை  செலுத்துவோம் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அப்போது,

சங்கீதம்: 147:12-18

எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே உன் தேவனைத் துதி.

அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.

பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப் போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.

அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?                                       

அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.

கர்த்தர் நம் இருதய வாசல்களை திறக்கும் போது கிறிஸ்து எருசலேமாகவும், சீயோனாகவும் வெளிப்பட்டு நம் இருதயத்தில் இருந்து தேவனை ஸ்துதித்து, ஸ்தோத்தரித்து நம் ஆத்துமாவுக்குள் ஆசீர்வாதத்தை தருகிறார்.

அப்போது எருசலேமுக்கும், சீயோனுக்கும் சமாதானம் நல்கப்படுகிறது. பின்பு கோதுமை என்பது தேவனுடைய வசனத்தினால் திருப்தியாக்குகிறார்.

பின்பு அவருடைய வார்த்தை கிறிஸ்து மூலம் நம் ஆத்துமாவில் அனுப்பப்படுகிறது. அவருடைய சொல் தீவிரமாய் சென்று நம்மை பஞ்சைப் போன்ற வெண்மையாக நம் ஆத்துமாவை பரிசுத்த படுத்துகிறார். அப்போது சாம்பலை போல உறைந்த பனியை (தேவ வசனம்) தூவுகிறார்.

ஆனால் பரிசுத்தமாகாமல் இருப்போமானால் கல்மழையை துணிக்கைகளாக அனுப்புகிறார்.

அதென்னவென்றால்  எச்சரிப்பின் வார்த்தைகளை நமக்குள் அனுப்புகிறார் அதற்கு நாம் ஒருபோதும் தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது. அதை தான் அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? என்று கேட்கப்படுகிறது.

அவ்விதம் தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு நாம் கீழ்ப்படிந்து, நம் உள்ளம் உடைந்து ஒப்புக்கொடுப்போமானால் அந்த கல்மழையாகிய துணிக்கையை அவருடைய வார்த்தையை அனுப்பி அதை உருகப்பண்ணி அதில் அவருடைய காற்றை வீசும்படி செய்ய நம் உள்ளம் தூய்மையான ஜீவ தண்ணீர் ஓடுகிற நதியாகி விடும். பின்பு நாம் தேவனை பரிசுத்தத்தில் நின்றுகொண்டு ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்வோம்.

அன்றியும் எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீண்டு எடுக்கும் படியாக ஏழாவது வாதை அனுப்பியும் தேவன் பார்வோன் இருதயத்தை கடினப்படுத்துகிறார்.

யாத்திராகமம்: 9:26-32

இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.                                                                                                 

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து; நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.

இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.

ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.

அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப் பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.

கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் எகிப்தின் துர் உபதேசத்தை தேவன் நம் உள்ளத்தில் வாதைகளை அனுப்பி அழிக்கிறார்.

பின்பு மோசே பார்வோனை விட்டு புறப்பட்டவுடனே கைகளை வானத்திற்கு நேராக விரித்தான். அப்போது இடி முழக்கங்களும், கல்மழையும் நின்று போயின.

பின்னும் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் பாவஞ்செய்து தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

பிரியமானவர்களே, இதனை வாசிக்கிற தேவடைய ஜனமே இப்போது அவரவர் நம் இருதயம் எப்படிப்பட்டதாக இருக்கிறதை உணர்ந்து இனிமேலாவது பார்வோனையும் அவன் ஊழியக்காரரை போல பாவஞ் செய்து இருதயத்தைக் கடினப்படுத்தாதபடி, தேவன் நம் விண்ணப்பத்தை கேட்டு நமக்குத் தந்த ஆசீர்வாதத்தை நினைத்து, தேவனுக்கென்று நம்மை முழுமையும் ஒப்புக் கொடுப்போமா?

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

 -தொடர்ச்சி நாளை.