தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 147:18

அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

இஸ்ரவேலர் வஸ்திரங்களை தோய்த்தல் - திருஷ்டாந்தத்தோடு:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் ஏழாம் வாதையை எகிப்தில் அனுப்பினதை பார்க்கிறோம். கல்மழை, இடிமுழக்கங்கள், தரையில் அக்கினி இவைகள் எகிப்தியருக்கு வாதையாக இருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் இஸ்ரவேலர் நடுவிலும் அவ்விதம் ஒரு நியாயத்தீர்ப்பு இருக்கிறதை வேத வசனத்தில் கூட நாம் வாசிக்கிறோம்.

யாத்திராகமம்: 19:10-15

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,

மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.

ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.

ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.            மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.

அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.

இவ்விதமாக கர்த்தர் மோசேயிடம் சொல்கிறார். மூன்றாம் நாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருஷ்டாந்தப்படுகிறது. ஏனென்றால் ஜனங்களை. 

பரிசுத்தப்படுத்துவதற்கு இவை முக்கியமான காரியம் எப்படியெனில் முதலில் இரண்டு நாள் தேவனுடைய வார்த்தைகளை கேட்டு உள்ளத்தில் அவர்கள் ஏற்றுக் கொண்டு தேவனை மகிமைப் படுத்துவார்களானால் மூன்றாம் நாளில் ஆத்துமாவின் உயிர்ப்பு நிச்சயமாக காணப்படும். அதைத்தான்,

ஓசியா: 6:1-3

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

இரண்டு நாளுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம் போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப் போலவும், பூமியின் மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.

பிரியமானவர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் அவருடைய வார்த்தைகளை நம் உள்ளத்தில் அனுப்பும் போது அவருடைய மகிமையாகிய கிறிஸ்து நம் உள்ளத்தில் உயிர்ப்பிக்கப்பட்டு நம் மரித்த ஆத்துமா கிறிஸ்துவோடு எழும்புகிறது. அப்போது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்.

பின்பு தான் நாம் அறிவடைந்து தேவனை தொடர்ந்து போவோம் அப்போது கிறிஸ்துவின் புறப்படுதல் அருணோதயம் போல் நம் உள்ளத்தில் ஆயத்தமாயிருக்கிறது. பின்பு அது நம் மேல் முன்மாரி,பின் மாரியாக பெய்கிறது. இது தான் நம் விசுவாச யாத்திரை இதனைத் தான் தேவன் மோசேயை வைத்து நமக்கு எகிப்தில் இருந்த இஸ்ரவேலர் புறப்படுதலை திருஷ்டாந்தப்படுத்தி என் குமாரனை,

என் சேஷ்டபுத்திரனை அனுப்பி விடு என்று சொல்வது.

இஸ்ரவேலர் நடுவிலும் ஒரு நியாயத்தீர்ப்போடு இந்த காரியத்தை நடத்துகிறார். சில கட்டளை போடுகிறார். ஜனங்கள் மலையில் ஏறக் கூடாது என்றும் அதின் அடிவாரத்தை யாரும் தொடக் கூடாது என்றும் எச்சரித்து அதை தொடுகிறவன் நிச்சயமாய் கொல்லப்படுவான் என்கிறார்.

பின்பு மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களை 

பரிசுத்தபடுத்துகிறான். அவர்கள் எல்லோரும் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.

அவர்கள் எவ்விதம் பரிசுத்த படுகிறார்கள் என்றால் எல்லாரையும் மலையின் அடிவாரத்தில் வர சொல்கிறார்கள் மேலும் வஸ்திரத்தையும் தோய்த்தார்கள். இவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு 

திருஷ்டாந்தபடுத்துகிறார். எப்படியெனில் அந்த சீனாய் மலை (கிறிஸ்து) தேவனுடைய வார்த்தை தான் கிறிஸ்து. கிறிஸ்துவின் வசனம் தான் அவருடைய இரத்தம். இவ்விதமாக கிறிஸ்து உலகத்தில் வருவதற்கு முன்பாக தேவன் சீனாய் மலையில் பிரத்தியட்சமாய் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் இறங்குகிறார். அங்கு ஒரு பெரிய நியாயத்தீர்ப்பும் உண்டாகிறது. நம்முடைய வாழ்க்கையில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 

தேவனுடைய வார்த்தையால் இங்கு வஸ்திரங்கள் தோய்க்கப்படுகிறது. வஸ்திரங்களை தோய்த்தவர்களிடத்தில் சொல்லப்படுவது என்னவென்றால் மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள் மனைவியினிடத்தில் சேராதிருங்கள்.

இதிலிருந்து தெரிய வருவது நாம் உண்மையாக தேவன் சத்தம் கேட்டு இருப்போமானால் நம் ஆத்மா மூன்றாம் நாளில் எழும்பும். மேலும் வஸ்திரம் தோய்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் கறைகள் உண்டாக்க கூடாது என்பதை காட்டுகிறது. மூன்றாம் நாளில் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும், மின்னல்களும் மலையின் மேல் கார்மேகமும் பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று.

பாளத்திலிருந்து ஜனங்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.

யாத்திராகமம்: 19:17

அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.

இவை தான் நம்முடைய விசுவாச யாத்திரை கிறிஸ்துவின் மூலம் இவ்விதமாக முன்மாரி, பின்மாரியின் அனுபவம் தான் மணவாளனுக்கு எதிர்கொண்டு போகுதல். அதை தான் தேவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை உலகில் அனுப்பி, பாடுகட்குட்படுத்தி சிலுவையில் அறைந்து, மரித்து அடக்கப் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பின்பு அநேகருக்கு தரிசனமாகி அதன் பின்பு பெந்தேகொஸ்தே நாளில் பிரத்தியட்சமாய் வந்து இறங்குகிறார். இவைதான் தேவன் நமக்கு முன்மாரி, பின்மாரியின் அனுபவம் தான் நாம் மணவாளனக்கு விழித்திருந்து (இருதயம்) எதிர்கொண்டு செல்லுதல்.

இதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் மூன்று நாளைக்குள் ஆலயத்தை எழுப்புவேன் என்றார். இயேசு தம்முடைய சரீரத்தை குறித்து கூறுகிறார். இவ்விதமாக நம் எல்லோரையும் ஆலயமாக்குகிறார். இதை தான் பழைய ஏற்பாட்டில் மூன்று நாள் உள்ள யாத்திரை நாற்பது வருஷம் ஏனென்றால் (இருதய கடினம்).

இவ்விதமாக விசுவாசித்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய இரத்தத்தில் வஸ்திரத்தை தோய்க்கிறார்கள். இவ்விதமாக கன்மலையின் மேல் நாம் அஸ்திபாரம் போட வேண்டும். கன்மலையின் மேல் அஸ்திபாரம் போட்டவர்கள் உறுதியான அஸ்திபாரம் போடபட்டவர்கள்.

II தீமோத்தேயு: 2:19

ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.

பிரியமானவர்களே உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்க நாம் எல்லோரும் அநியாயத்தை விட்டு விலக கடவோம். ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.                         

-தொடர்ச்சி நாளை.