தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 66:8

ஜனங்களே நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குங் சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 எகிப்தின் வாதைகளாகிய ஏழாம் வாதையின் செயல்பாடுகள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் தியானித்த வேத பகுதியில் எகிப்தியர்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று தேவன் சித்தம் கொண்டு எகிப்தில் வாதைகளை அனுப்புகிறதை பார்த்தோம். ஏனென்றால் நாம் தேவனை ஆவியில் ஆராதிப்பதற்கு தடையாக இருக்கிற துன்மார்க்க கிரியைகளை நம் முழு உள்ளத்திலிருந்தும் மாற்றி முழு ஆத்துமாவோடும், உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும் தேவனை ஆராதிக்கும் படியாகவே தேவன் திருஷ்டாந்தத்தில் கூட தேவன் எகிப்தில் வாதைகளை அனுப்பி காண்பிக்கிறார். அவற்றை அதிகாலை வேளையில் எவ்விதத்திற் நிர்மூலம் பண்ணுகிறார் என்றும் தியானித்தோம்.

மேலும் கர்த்தர் சொல்லுகிறார் நான் சகலவித வாதைகளையும், உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்.

யாத்திராகமம்: 9:15,16

நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.

என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

இவ்விதமாக கர்த்தர் மோசேயினிடத்தில் பார்வோனிடத்தில் சொல்ல செல்லுகிறார்.

பிரியமானவர்களே தேவன் நினைத்தால் பார்வோன் உடனே இஸ்ரவேலை அனுப்பி விட்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவது என்னவென்றால் தேவனுடைய நாமம் பூமியெங்கும் பிரஸ்தாபமாகும் படியாகவும், பார்வோன் முழுமையும் பூமியிலிராதபடி அழிக்கும் படியாகவும் தான் தேவன் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.

ஆறாம் வாதையாகிய கொப்புளம் தேவன் அனுப்பின பிறகும் பார்வோன் ஜனங்களை ஆராதனைக்கு விடாத காரணத்தால்,

யாத்திராகமம்: 9:18

எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.

இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருக ஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்

பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப் பண்ணினான்.

எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.

கல்மழையாகிய வாதையை தேவன் எகிப்தில் அனுப்புவேன் என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்கள் மேல் அந்த கல்மழை பெய்வதில்லை. கீழ்ப்படியாதவர்கள் மேல் அந்த கல்மழை பெய்யும். இந்த வாதை ஏழாம் வாதை. இந்த வாதையும் மனுஷர்களுடைய உள்ளத்தில் அனுப்புவதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

ஏனென்றால் உள்ளத்தில் தான் தேவ வல்லமை வெளிப்படும்.

கர்த்தர் எல்லாரைக் காட்டிலும் வல்லமையுள்ளவர் என்பதை பூமியிலுள்ள சகல ஜனங்களுக்கும் அறியும் படியாக இதை செய்கிறார். அநேக எகிப்தியர்கள் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்தார்கள்.

கீழ்படிந்தவர்கள் அதன் பயனை பெற்றுக் கொண்டார்கள். கீழ்ப்படியாதவர்கள் அந்த பயனை இழந்து விட்டார்கள்.

கர்த்தர் மோசேயிடம் வானத்திற்கு நேராக தன் கோலை நீட்டு என்று சொன்னபோது மோசே தன் கையில் இருந்த கோலை வானத்திற்கு நேராக நீட்டினான் அப்பொழுது கர்த்தர் இடி முழக்கங்களையும்,

கல்மழையையும் அனுப்பினார். அக்கினி தரையின் மேல் வேகமாய் ஓடிற்று. எகிப்தின் தேசத்தின் மேல் கர்த்தர் மழையைப் பெய்ய பண்ணினார்.

யாத்திராகமம்: 9:24

கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.

இவ்விதமாக கல்மழை, இடிமுழக்கங்கள் அக்கினி இவைகளால் மனிதரையும், மிருகஜீவன்களையும் வெளியிலே இருந்தவைகள் எல்லாவற்றையும் கல்மழை அழித்து போட்டது.அக்கினி தரையின் மேல் வேகமாக ஓடினது. தரையின் மேல் ஓடினது என்ன என்றால் நம் ஆத்துமா உயிர் இல்லாமல் மண்ணோடு மண்ணு ஒட்டி இருக்கிறதினால் கர்த்தர் உள்ளத்தில் நியாயத்தீர்ப்பின் அக்கினி அனுப்புகிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

மேலும் மனிதரையும், மிருக ஜீவன்களையும் வெளியிலே இருந்தவைகள் என்றால் இரட்சிப்புக்குள் வராத மனிதர்கள் இவர்களை எல்லாம் கல்மழை அழித்துப் போட்டது. வெளியின் பயிர் வகைகளை எல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்து,  போட்டது என்னவென்றால், கிறிஸ்துவின் சபைகளில் சேர்க்கப்படாமல் இருந்த ஆத்துமாக்களை தேவன் முறித்துப் போடுகிறார்.

அதைத்தான்,

சங்கீதம்: 20:7

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.

மனுஷர்களுடைய உள்ளத்தில் எப்படி கல்மழை இடிமுழக்கம் எழும்பும் என்று நீங்கள் சிந்திப்பீர்களா? எப்படி எழும்பும் என்றால் இது ஒரு வாதை. இந்த வாதை புரண்டு வரும் போது அதின் கீழ் மதிக்கப்படுவீர்கள்.

ஏசாயா: 28:19-21

அது புரண்டு வந்த மாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும் பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.

கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினது போல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டது போல கோபங்கொள்வார்.

இந்த வாதை தேவனுடைய உக்கிரக கோபம் அனுதினம் நம் ஆத்துமாவில் வேகிற நெருப்பை போல் ஏதாவது காரியங்கள் பிரதிகூலத்தின் செய்திகள் தாங்கிக் கொள்ளாத வேதனையோடேபகலிலும் இரவிலும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். அப்போது நமக்கு தூக்கமே வராது. இதைத்தான் கல்மழை இடிமுழக்கம் தரையில் அக்கினி என்று தேவன் தெளிவுபடுத்துகிறார். இவ்விதமாக பார்வோன் உள்ளத்திலும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள் மேல் எல்லாம் வந்தது. இவை  வராதபடி நம் உள்ளம் தூய்மைப் படுத்துவோம். மேலும் நாளை தியானிப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.                   

-தொடர்ச்சி நாளை.