தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 143:8

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

இஸ்ரவேலர் அதிகாலை ஆராதனை எகிப்தியர் அழிக்கப்படுவது:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்ததான வேதப் பகுதியில் கர்த்தர் எகிப்தில் வாதைகளை அனுப்பியும் பார்வோன் இருதயம் கடினப்படுத்தி ஜனங்கள் தேவனுக்கு ஆராதனை செய்ய அனுப்பவில்லை. ஆறாம் வாதையாகிய கொப்புளம் எகிப்தில் யாவர் மேலும் வரப்பண்ணினதை  பார்க்கிறோம். சூளையின் சாம்பலை எடுத்து வானத்திற்கு நேராக மோசே இறைத்தான் தேவன் சொன்னபடியே செய்தான். அதனால் எகிப்தின் எல்லாவற்றின் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் வந்தது. இதை தேவன் சகல ஜனங்களையும் தேசம் அனைத்தும் பரிசுத்தமாக்கும் படியும் என்றைன்றைக்கும் இடிக்கப்படாமலும்,

பிடுங்கப்படாமலும் கர்த்தருக்குப் பயப்படும் பயம் எல்லோருக்கும் உண்டாயிருக்கும்படியாகவும் இப்படி செய்தார். ஆனால் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார். பார்வோன் மோசேக்கு செவிக் கொடுக்கவில்லை.

யாத்திராகமம்: 9:13-18

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப் போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்.                                                                                             

நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.

என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?

எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.

பிரியமானவர்களே தேவன் எகிப்தை வைத்த நமக்கு திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் நம் முந்தின முற்காலத்தில் இருந்த பாவ பாரம்பரியம் எகிப்து என்றும், ஆனால் தேவன் தம்முடைய வல்லமையின் செங்கோலை அனுப்பி, நம் பாரம்பரிய பாவம் விக்கிரகராதனை, மேலும் உலக வழிபாடுகள் இவற்றை அழித்து ஒரு சால்வையை போல் சுருட்டி என்றென்றும் மாறாதவராயிருக்கிறார்.

நீதியாகிய கிறிஸ்துவை அங்கு நிலைநாட்டி, கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனை ஆவியிலும்,உண்மையிலும் ஆராதிக்கும் படியாக தேவன் எகிப்தையும், பார்வோனையும் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

பார்வோன் என்பது தேவனை உண்மையாக இருதயத்தோடு ஆராதிக்க விடாமல் இருக்கிற கடின உள்ளம். அதனால் தேவன் ஒவ்வொரு சிந்தையாக நம்மை பரிசுத்தப்படுத்தி முழு சரீரமும் பரிசுத்தப்படுத்தும் படியாக இருதயத்தை கடினப்படுத்துகிறதை பார்க்கிறோம். தேவனை ஆராதனை செய்யும் படியாக இஸ்ரவேல் சபையை அனுப்பிவிட சொல்லும் போது மோசே, ஆரோன் என்பவர்கள் மூன்று நாள் பிரயாண தூரம் தான் உண்டு என்று சொல்லுகிறது பார்க்கிறோம். இந்த மூன்று நாள் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பைக் காட்டுகிறது. நம்முடைய ஆத்துமா இஸ்ரவேல். இஸ்ரவேலை குறித்து தேவன் என்னுடைய குமாரன், என் சேஷ்ட புத்திர என்று தேவன் செல்கிறதை பார்க்கிறோம். தேவனுடைய குமாரன் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அது தான் இஸ்ரவேல் சபை. இந்த சபை உயிர்த்தெழுந்த கிறிஸ்து. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தி தான் எகிப்திலிருந்து இஸ்ரவேலர் மீண்டெடுப்பு இதற்கு பார்வோன் விடாதபடி தேவன் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி முழுமையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் வரையிலும் தேவன் வாதைகளால் வாதிக்கிறார். இவை எவற்றிற்கென்றால் முழுமையான ஒரு ஒப்புக்கொடுத்தல் நம் உள்ளத்திற்கு வரவேண்டும். 

இவ்விதமாக முழு உள்ளத்தோடு, முழு மனதோடு, தேவனை சேவிக்க வேண்டும்.

நம் இருதயம் இடங்கொடுக்காத படி இருக்கிறதினால் கர்த்தர் மோசேயினிடத்தில் சொல்லுகிறார். நீ அதிகாலையில் பார்வோனிடத்தில் போ என்று சொல்லுகிறார்.

இவை எதற்கென்றால் நாம் அதிகாலையில் நம் ஆத்துமா ஆரோக்கியமடைந்தால், பார்வோனின் கிரியைகளின்று நாம் விடுதலையாக முடியும். மேலும் அவர் தம்முடைய வல்லமையை நம் உள்ளத்தில் அதிகமாக தருவார். நம்மை ஆவியில் ஆராதனைக்கு விடாதபடி இருக்கிற துர்கிரியைகளை தேவன் அகற்றுவார்.

மேலும் பிரியமானவர்களே அதிகாலை வேளையில் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்கிறவர்.

யாத்திராகமம்: 14:24-30

கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,

அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.

கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.

அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

பிரியமானவர்களே மேற்கூறிய வார்த்தைகள் எல்லாமே பழைய ஏற்பாட்டில் நம் ஆத்துமா கிறிஸ்துவுக்குள்ளாக மீட்கப்பட வேண்டிய திருஷ்டாந்தம்.

என்னவெனில் நம் இருதயத்தில் பாவம் பெருகி, பாராம்பரிய கிரியைகளாகிய அத்தனை செயல்களும் செய்வது நம் இருதயத கடினம். இவற்றிலிருந்து நம்மை கிறிஸ்து மூலம் இரட்சிக்க நமக்கு வழிகாட்டுகிறார். நம் உள்ளம் பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைக்க தேவன் வழிகாட்டும் படியாக வாதைகளை அனுப்புகிறார்.

மேலும் அதிகாலை வேளையில் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுகிறார். நம்மை பின் தொடருகிற எகிப்தின் கிரியைகளை அகற்றுவது ஜலம் என்பது கிறிஸ்து (வசனம்) அதன் மூலம் தேவன் அகற்றுகிறார். ஆனால் அந்த ஜலம் தான் எகிப்தின் சேனையை அழிக்கிறது. இவை என்னவென்றால் நம் பழைய பாவ சுபாவங்கள், பாரம்பரியம், உலக அந்தஸ்து, உலக  மேன்மை இவை எல்லாம் கிறிஸ்துவின் வசனத்தால் நிர்மூலம் பண்ணுகிறார். மேலும் எகிப்தியர்கள் கடற்கரையில் செத்து கிடக்கிறது. நம் உள்ளம் வசனத்தால் தேவன் சந்திக்கும்போது உள்ளத்தில் இருந்த செத்த கிரியைகளாகிய துன்மார்க்கன் அழிக்கப்பட்டு போகிறார்கள். அவ்விதமாக கிறிஸ்து (வசனம்). நம் ஆத்துமாவில் ஜீவன் பெருகிறது அப்போது நாம் அக்கரை வந்து சோர்ந்து தேவனை மகிமைப்படுத்த முடியும். நாம் உயிரோடு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஆராதிப்பதற்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்தி இந்த காரியங்கள் நம் உள்ளத்தில் நடந்தாலே நமக்கு இரட்சிப்பு உண்டு. இவ்விதமாக இஸ்ரவேலர் இரட்சிக்கப்படுகிறார்கள். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                     

-தொடர்ச்சி நாளை.