தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஓசியா: 6:11

யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தின் மேல் தேவன் ஆறாவது வாதை அனுப்பக் காரணம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் எகிப்தில் ஐந்தாவது வாதையாகிய  கொள்ளைநோய் அனுப்பினதை தியானித்தோம். ஆனால் இஸ்ரவேல் கர்த்தருடைய கட்டளை, கற்பனை, நியாயப் பிரமாணங்கள் ஏற்றுக் கொண்டு அதின் பிரகாரம் நடந்தால் எகிப்தின் வாதைகளில் ஒன்றும் நம்மை தொடாதபடி கர்த்தர் பாதுகாப்பார். மேலும் இஸ்ரவேலரை வர்த்திக்கப் பண்ணுவார். சபைகள் வளர்ந்து பெருகிக் கொண்டேயிருக்கும்.

பிரியமானவர்களே நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் நம்முடைய தேவன் இப்போது பூமியில் ஒரு கண்ணி போட்டு வைத்திருக்கிறார். இந்த கண்ணி எதற்கு என்றால், இந்த கண்ணி மூலம் அநேகரை தேவனன்டைக்கு இழுத்துக் கொள்ளும் படியாக, அதனை இந்நாட்களில் உணர்ந்து தேவனன்டைக்கு திரும்புவோமானால் இந்த கண்ணியை தேவன் பூமியிலிருந்து அகற்றிப்போடுவார்.

ஏனென்றால் இஸ்ரவேலர் அவரவருக்கு பிரியமான பிரகாரம் நடந்து தேவனுக்கு துரோகம் பண்ணுகிறோம்.

எப்படியெனில்,

ஆமோஸ்: 4:4-6

பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்குப் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும் மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,

புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக் குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்களே என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இவை எவற்றை விளக்குகிறது என்றால் எல்லோரும் பாரம்பரியத்தை களைந்து போடாதபடி, எகிப்தை ஒட்டி அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ற பிரகாரம் நடந்துகொண்டு, தேவனையும் சேவிக்கிறதினால் தேவன் அப்பங்குறைவை கட்டளையிடுகிறார். அது இப்போதும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் இவ்விதமாக பாராம்பரியம், விக்கிரக கிரியைகளை விடாமல் நடக்கிறதினால்,

ஆமோஸ்: 4:7

இதுவுமல்லாமல் அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.

இந்த தேவனுடைய வார்த்தை என்னவென்றால் உதாரணம் ஒரு வயல் அறுவடைக்கு நேரமாகி வளர்ந்து வரும் போது ஏற்ற காலங்களில் மழை பெய்து அதற்கு உகந்த தண்ணீர் கிடைக்காவிட்டால் அதன் நாற்றுகள் கருகிப்போகும். இதனை வைத்து தேவன் நம் ஆத்தும அறுவடையை விளக்கிக் காட்டுகிறார். தேவன் அவருடைய போஜனமாகிய ஆகாரத்தை நமக்கு தந்து நம் ஆத்துமா போஜனத்தை புசித்து அதன் வளர்ச்சி வளர்ந்து அறுவடைக்கு நேரம் வரும் போது, நம் ஆகாத கிரியைகளினிமித்தம் தேவன் கோபங்கொண்டு மழையை தடுக்கிறார். அப்போது அது கருகிப் போகிறது (கிருபை) சிலர் மேல் அது பெய்யவும், சிலர் மேல் பெய்யாமலிருக்கவும் பண்ணுகிறார். அந்த கிருபை பொழியாவிட்டால் அந்த ஆத்துமா சோர்ந்து கருகிப் நாசமாய் போகிறது. அதனை குறித்து,

ஆமோஸ்: 4:8                                                                                                                     

இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீத்துக் கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இது என்னவென்றால் முழுமனதோடு கர்த்தரிடத்தில் திரும்பாமல் இருக்கிறவர்களை குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ்: 4:9,10

கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ள நோயை உங்களுக்கு அனுப்பினேன். உங்கள் வாலிபரை பட்டயத்தால் கொன்றேன். உங்கள் குதிரைகளை அழித்துப் போட்டேன். உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற பண்ணினேன். ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இவையெல்லாம் இஸ்ரவேலர் நடுவில் தேவன் செய்கிறது என்னவென்றால், எகிப்தின் கிரியைகளை செய்வதினால் மட்டுமே என்பதை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் வேத வசனத்தில் இருக்கிற எல்லா காரியங்களும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது ஆகையால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் முழுமனதோடு கூட பழைய வாழ்க்கை எல்லாம் களைந்து போட்டு இன்றே மனந்திரும்புங்கள். அப்போது யாவரையும் இரட்சிப்பார்.

இவையெல்லாவற்றிலும் நம் இருதயம் கடினப்படுமானால் அது பார்வோனின் இருதயம்.                                                                                  பார்வோன் ஐந்தாவது வாதை, தேவன் அனுப்பியும் இஸ்ரவேல் சபையை தேவனை ஆராதனை செய்வதற்கு விடவில்லை மீண்டும் அவன் இருதயம் கடினப்பட்டது.

யாத்திராகமம்: 9:8

அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்கு முன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.

அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.

அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.

அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.

ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

கர்த்தர் எகிப்தியனுடைய இருதயத்தை உடைக்கும் படி இப்படி செய்கிறார். ஆனால் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.

அவர்களுடைய முழு இருதயத்தையும் நம்பப்பண்ணும் படியாகவும் இவ்விதம் தேவன் செய்கிறார்.

பிரியமானவர்களே நாம் இருதயம் நொறுக்கி தேவனுடைய சமூகத்தில் ஒப்புக் கொடுப்போமானால்,

எரேமியா: 31:40

பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார். ஆதலால் பிரியமானவர்களே வேத வசனத்தை தியானிக்கிற சகோதரர்களே நம் முழு உள்ளமும், பரிசுத்தமாக்க பட இப்போதே ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.