தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

உபாகமம்: 10:16

ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

கொள்ளை நோய்க்கு ஒப்புக்கொடாதபடி பாதுகாக்கிறார் (சபையை பெருக பண்ணுதல்)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்த வேதப் பகுதியில் எகிப்தியருடைய விக்கிரகராதனையைக் குறித்து மேலும் எகிப்தில் நான்காவது வாதையாக தேவன் மோசே, ஆரோன் என்பவர்களை வைத்து வண்டுகளை எகிப்து தேசம் எங்கும் அனுப்பி விடுகிறதை நாம் பார்த்தோம் ஆனாலும் பார்வோன் தன் இருதயத்தை கடினபடுத்துகிறான்.

யாத்திராகமம் 9:1-6

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.

நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்தி வைத்தாயாகில்,

கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடு மாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.

கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.

மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.                                                                     மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

இதனை பார்வோன் விசாரித்து அறிந்து மீண்டும் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. அவன் ஜனங்களை போகவிடவில்லை.

ஆகையால் பிரியமானவர்களே தேவனால் மீண்டு எடுக்கப்பட்ட தேவ ஜனமே, நம்மிடம் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

உபாகமம்: 6:10-12

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,

நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

நாம் மீண்டு எடுக்கப்பட்ட பிறகு நம் உள்ளத்தில் எகிப்தின் தேவர்களை நினைக்கவோ செயல்படவோக் கூடாது. எப்போதும் கர்த்தருக்கு பயந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும்.

உபாகமம்: 6:15

உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.

நம்முடைய தேவன் நம்மிடத்தில் எரிச்சல் கொள்வதற்கு காரணம் அவரிடத்தில் நன்மையை பெற்று விட்டு,வேறே தேவர்களை பின்பற்றுவதும் அவரை நாம் மாசாவிலே செய்தது போல் பரீட்சை பார்ப்பதும் தேவனுக்கு ஆகாத காரியம்.

உபாகமம்: 6:17                                                                                                              

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,

கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.

உபாகமம்: 7:11-14

ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.

இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,

உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்கள் எல்லாமே நாம் கர்த்தருக்குள் நடந்துக் கொள்ள வேண்டிய விதிமுறைகள். மேலும் தேவன் சபையின் வளர்ச்சியை பற்றி கூறுகிறார். சபையின் வளர்ச்சி என்றாலோ நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி. ஆவிக்குரிய வளர்ச்சி சத்தியத்தின் படி செயல்பட வேண்டும். அப்படியானால் மாத்திரமே தேவன் பிரியப்படுவார். அல்லாமலும் ஆத்துமாக்களை பெருகப்பண்ண வேண்டுமானால் சத்தியத்தில் ஒவ்வொரு ஆத்துமாவும் வளர்ந்து, அவர்களிலிருந்து கிறிஸ்து (வேத வசனமாகிய வித்து) மூலம் அநேக ஆத்துமாவை ஈனும் படி செய்கிறார். அவை தான் வர்த்திக்கப்பண்ணுவது அப்படி ஆத்துமாக்கள் பெருகினால் மாத்திரமே தேவனுக்குப் பிரியமாயிருக்கும் அவர்கள் தான் தேவனுடைய பிள்ளைகள்.

மேலும் உன் நிலத்தின் கனி, தானியம், திராட்ச ரசம், எண்ணெய், மாடுகளின் பலன், ஆட்டுமந்தை இவையெல்லாமே ஆத்துமாக்களை குறித்து திருஷ்டாந்தபடுத்துகிறார்.

மேலும் ஆணிலாகிலும், பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை இவ்விதமாக நாம் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போம் என்று தேவன் சொல்வது என்னவென்றால் பதர் இல்லாமல் எல்லாம் விதையாக இருக்குமானால் அந்த விதைகள் மூலம் தேவன் நமக்கு நல்ல பலன் ஆகிய அடுத்த விதையை தருவார். இவ்விதமாகவே தேவன் ஒவ்வொருவரையும் பெருக பண்ணுகிறார்.

மற்றும் இப்படிப்பட்ட உண்மையான வளர்ச்சி நம் எல்லோரிடத்திலும் இருக்குமானால் எந்தவிதமான கொள்ளை நோய்களுக்கும் நம்மை ஒப்புக் கொடுக்க மாட்டார். அதைத்தான்,

உபாகமம்: 7:15,16

கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.

உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும்.

ஆகையால் பிரியமானவர்களே தேவனுடைய வசனத்துக்கு நடுங்கி, அஞ்சி அவருக்கு பயந்து அவர் கற்பனை, கட்டளைகள் பிரகாரம் நடப்போமானால் தேவன் எந்த கொள்ளை நோய்க்கும் நம்மளில் யாரையும் ஒப்புக்கொடாமல் பாதுகாப்பார். நாம் தேவ சித்தம் செய்கிறவர்களாக கீழ்ப்படிவோம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.             

-தொடர்ச்சி நாளை.