தேவனுடைய விரல்:- நியாயத்தீர்ப்பு

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 10, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 67:4

தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 தேவனுடைய விரல்:- நியாயத்தீர்ப்பு

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் தேவனுடைய விரல் என்பது கர்த்தர் நம்மை நியாயத்தீர்க்கிறார் என்பதன் அடிப்படை கருத்தோடு தியானித்தோம். நாம் இஸ்ரவேலரானால் தேவனுடைய பிள்ளைகள் எந்தவிதமான எகிப்தின் கிரியைகளும் நம் உள்ளத்தில் இல்லாத படி தேவனுடைய வசனமாகிய கற்பனை, கட்டளைகள், நீதி நியாயங்கள், பிரமாணங்கள் இவைகளை ஏற்றுக் கொண்டவர்களாக அதன்படி நடந்து எல்லா அநியாயங்களையும் நம்மை விட்டு நீக்கி முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட பிள்ளைகளாக இருப்பதே தேவனுடைய சித்தம். அப்படி நாம் உண்மையாக தேவனுடைய ஆவிக்கேற்றபடி நடவாமல் இருந்தால், எகிப்தின் வாதைகளாகிய நியாயத்தீர்ப்பில் நாம் தள்ளப்படுவோம்.  கழிந்த நாளில் பார்வோன், இஸ்ரவேலரை தேவனை ஆராதிக்க விடாமல் இருதயத்தை கடினப்படுத்துகிறான். அங்கு அனுப்பப்பட்ட வாதைகளாக பேன்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்பது நமக்கு புரிய வருகிறது. தேவன் அவருடைய விரலால் என்ன சொல்கிறார் என்பதின் கருத்தில் ஒன்றை தியானிப்போம்.

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் ,+பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகை போட்டான். அப்பொழுது தேவனுடைய பாத்திரங்களில் சிலவற்றையும், யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். அவன் அந்தப் பாத்திரங்களை சிநேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்கு கொண்டு போய் அவைகளை தன் தேவனுடைய பண்டக சாலைக்குள் வைத்தான்.

சிநேயார் தேசம் என்பது பாபிலோன் மகாணம், தேவனுடைய ஆலயத்திலுள்ள பாத்திரங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதின் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால் தேவனுடைய ஆலயத்திலுள்ள முக்கியமான ஆத்துமாக்களை காட்டுகிறார்  என்றால்,  நாம் தேவனுடைய செயல்களை செய்யாமல் வேறு விதமாக உலக காரியங்களோடு ஒப்புரவாகுவோமானால் தேவன் நம் ஆத்துமாவை அவ்விதமாக பாபிலோனின் கையில் ஒப்புக்கொடுக்கிறார். அப்படியிருந்தால் அவர்கள் உலகப் பிரகாரமான வழிபாடுகளிலும், உலக ஆசை, மோக இச்சை, மேன்மை இவைகளில் விழுந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் விழுந்து கிடக்கிற இடம் அவர்களுக்கு தெரியாது. புத்தியானது அந்தகாரப்பட்டு விடும். மேலும் விருத்தசேதனமில்லாதவர்களோடு கூட பாதாளத்தில் இறங்குவார்கள்.

அதனால் பிரியமானவர்களே எகிப்தின் கிரியைகள் நம்மிடத்தில் இல்லாத படி அழித்துவிட வேண்டும்.

எசேக்கியேல்: 30:22-26

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,

எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.

பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.

பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

அதனால் நம்மிடத்தில் ஒருபோதும் எகிப்தின் கிரியைகள் வராதப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மேலும் நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளி பாத்திரங்களில் ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும், தன் மனைவிகளும், தன் வைப்பாட்டிகளும், திராட்சரசம் குடிப்பதற்காக அவைகளை கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.

அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற் பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள்;

அவைகளில் ராஜாவும், அவனுடைய பிரபுக்களும், அவருடைய மனைவிகளும், அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.

அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும், வெள்ளியும் வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தேவர்களை புகழ்ந்தார்கள். இதன் பொருள் நாம் தியானிக்க வேண்டும்.

I கொரிந்தியர்: 10:14

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

யாத்திராகமம்: 20:3-5

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

ஏசாயா: 42:8

நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

இவ்விதமாக நம்முடைய தேவனாகிய கர்த்தர் விக்கிரகங்களை குறித்துச் சொல்லியிருக்க, பெல்ஷாத்சார் ராஜாவும், அவனுடைய பிரபுக்களும், மனைவிகளும், வைப்பாட்டிகளும் அந்த பாத்திரங்களில் திராட்சரசம் குடித்து பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இரும்பும், கல்லும், மரமுமாகிய தேவர்களை புகழ்ந்தார்கள்.

தானியேல்: 5:5

அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

இது என்னவென்றால் தேவனுடைய கைவிரல் நியாயத்தீர்ப்பை தான் குறிக்கிறது. எப்படியெனில் தேவனுடைய ஆலயத்திலிருந்து கொண்டுவந்த பொற்பாத்திரம் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆத்துமாவை காட்டுகிறது. அதே ஆத்துமாவில் திராட்ச ரசம் (சத்திய உபதேசம்) ராஜாவும், ராஜாத்தியும் குடிக்கிறார்கள். ஆனால் சத்தியத்தை பெற்றுக்கொண்டு,  பொன்னும்,  வெள்ளியும்,  வெண்கலமும், இரும்பும், கல்லும், மரமுமாகிய தேவர்களை புகழ்ந்தார்கள். இதன் பொருள் என்னவென்றால் சத்தியத்தை கேட்டவர்கள்  விக்கிரகத்தை சேவிக்கிறார்கள். அதனால் தேவன் கோபம் கொள்கிறார்

தானியேல்: 5:5-7

அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.

ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

ஆனால் அவர்களால் அர்த்தம் சொல்ல கூடாமற் போயிற்று. ஆனால் அதன் பிறகு தானியேல் அதன் அர்த்தத்தை சொல்ல அதன் அர்த்தம் என்னவென்றால்,

தானியேல்: 5:25-30

எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.

இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,

தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,

பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.

அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.

அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.

இவ்விதமாக தேவன் நியாயந்தீர்க்கிறார். என்னவென்றால் யாருடைய வாழ்வில் ராஜீரீக அபிஷேகம் பெற்று பின் இருதயம் மேட்டிமை ஆகிறதோ அவர்களை தேவன் சத்துருகளின் கையில் ஒப்புக்கொடுத்து இந்த ராஜ்ய பாரத்தை பிரித்து அவர்களை தாழ்த்தி போடுகிறார்.

இதிலிருந்து தெரியவருகிறது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாவிட்டால் பெருமையான இருதயம், இந்த மேட்டிமையான இருதயத்தை கடினப்படுத்தி அதை தாழ்மைபடுத்தும் வரையிலும் நம்மை உடைத்து போடுகிறார். அதனால் நாம் யாவரும் தாழ்மையோடு அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவோம்.              

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.                                         

-தொடர்ச்சி நாளை.