Aug 08, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 91:16

நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

வஞ்சிக்கபடாதபடிக்கு நம்மை பாதுகாப்பது:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்டு எடுக்கும் படியாக தேவன் இரண்டாவது வாதையாகிய தவளைகளை எகிப்தின் நதியில் அனுப்புகிறதை பார்த்தோம். மேலும் தவளைகள் எவ்விதத்தில் சத்தியம் ஏற்றுக்கொள்ளாதவர்கள் நடுவில் கிரியை செய்கிறது என்பதை குறித்து தியானித்தோம். அநேகர் அற்புதங்களை கண்டு வஞ்சிக்கப்பட்டு போய்விடுகிறார்கள். நாம் யாரும் வஞ்சிக்கபடாதபடி எச்சரிக்கையாக நம் ஆத்துமாவை காத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்மையாக சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்போமானால்,

II தெசலோனிக்கேயர்: 2:10-12

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இவ்விதமாக தான் தேவன் எகிப்திலும் வாதைகளை அனுப்பி அங்குள்ள நதி தவளைகளால் நிறைய பண்ணுகிறார். இதேபோல் நம் உள்ளம் அநீதியில் பிரியப்படுவோமானால் நாம் ஆக்கினைக்குள்ளாக்குபடும் படியாக கொடிய  வஞ்சகத்தை தேவன் நமக்குள் அனுப்புகிறார். மேலும் அவர்களை குறித்துத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.

மத்தேயு: 7:21-24

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

இவ்விதமாக பிரியமானவர்களே அற்புதங்களை கண்டு நாம் ஏமாந்துவிட கூடாது நம்முடைய வீடு (நித்திய வீடு) கன்மலையின் மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதின் அஸ்திபாரம் கிறிஸ்து (தேவனுடைய வசனம்). 

மேலும் தேவனுடைய சத்திய வார்த்தையின் படி நடவாமல் அற்புதங்களைச் செய்கிறவர்களை குறித்து கிறிஸ்து சொல்வது என்னவென்றால்,

லூக்கா: 10:13-20

கோராசீன் பட்டணமே, உனக்கு, ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.

நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.

வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,

சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.

இவ்விதமாக இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது ஆவியில் களிகூருகிறார். ஏனென்றால் இவைகளை ஞானிகளுக்கும்,

கல்விமான்களுக்கும் வெளிப்படுத்தாமல் பாலகருக்கு வெளிப்படுத்தியிருக்கிறதால் தேவனை ஸ்தோத்தரிக்கிறார். இவைகள் நமக்குத்தான் தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரியமானவர்களே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்படாமல், நம்முடைய நாமங்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? என்பதை நாம் சிந்தித்து அப்படி நம் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக  சந்தோஷப்பட வேண்டும்.

மேலும் இதனை வாசிக்கிற அன்பானவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் இதோ சர்ப்பங்களையும், தேள்களையும் சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்.

இவ்விதமான அதிகாரம் யாருக்கு கொடுக்கிறாரென்றால் சீஷர்களுக்கு, சீஷர்கள் யார்? இயேசு கிறிஸ்துவின் வசனத்தில் நிலைத்திருக்கிறவர்கள் சீஷர்கள். அந்த சீஷர்கள் தான் இயேசுவோடு கூட பந்தியிருந்தவர்கள் எவ்வளவோ விசுவாசிகள் அவருடைய வசனத்தை கேட்கும்படி வந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் முந்தின பகுதியை நாம் பார்க்கும்போது எழுபது சீஷர்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டாலும் பின்பு நிலைத்திருந்தவர்கள் பன்னிரண்டு சீஷர்கள் அதிலும் ஒருவன் பணஆசையினிமித்தமாக அழிந்து போகிறான்.

மேலும் சத்துருக்களை மேற்கொள்ள நமக்கும் தேவன் அதிகாரம் தருகிறார். சத்துரு யார்? எங்கு இருக்கிறான் தேவனுடைய வார்த்தைகளை கேட்டும் விசுவாசியாமல் இருந்தால் நம் உள்ளத்தில் வலுசர்ப்பம் உண்டாகிறது. மீண்டும் மீண்டும் இருதயம் கடினபடுவோமானால் உள்ளத்தில் பிசாசின் நதி ஓடுகிறது. வலுசர்ப்பம், பிசாசின் நதி, தவளை இவற்றை நாம் கவனமாக வாசித்து, அடுத்ததான வாதை நம் உள்ளத்தில் தோன்றாதபடி, புதிய எருசலேமாகிய கிறிஸ்து நம் உள்ளத்தில் வெளிப்படும் பொருட்டாக நாம் தேவனுடைய வார்த்தைகளை கேட்டு ஏற்றுக் கொண்டு,  சத்தியத்தின் படி நடந்து சத்துருகளாகிய இந்த வாதைகளை தேவனுடைய வார்த்தைகளால் மேற்கொள்ளுவோம். எகிப்தின் வாதைகளால் நம் உள்ளம் சோர்ந்து போகாத படி நம்மை காத்துக் கொள்வோம். அதைதான்,

சங்கீதம்: 91:13-15

சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவனுடைய சத்தியத்தை நன்றாய் தியானித்து தேவ சத்தத்துக்கு கீழ்ப்படிவோமானால் தேவன் நம்மை உயர்ந்த அடைக்கலத்திலே நிச்சயம் வைப்பார் ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.                      

-தொடர்ச்சி நாளை