தேவனுக்கே  மகிமையுண்டாவதாக  

யோவான்: 4:24

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தின் இரண்டாவது வாதை:- தவளை (வஞ்சிக்கப்படாதிருங்கள்)

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நம்மை தேவன் அடிமையினின்று மீண்டு எடுப்பதை குறித்து இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனிடத்திலிருந்து விடுதலை செய்யும் படியாக காட்டின அடையாளங்களை திருஷ்டாந்தபடுத்தி இருப்பதை தியானித்தோம். அது என்னவென்றால் மாயமான இவ்வுலக வாழ்க்கையாகிய நம் முன்னோர்களால் அனுசரித்த பாரம்பரிய வாழ்க்கை பாவம், அக்கிரமம், மீறுதல் இவற்றிலிருந்து நம்மை விடுதலை செய்ய நம் தேவன் நோக்கம் உடையவராக நம் உள்ளத்தில் சில கஷ்டங்களை தருவதை மோசே, ஆரோன் மூலம் தேவன் நமக்குத் திருஷ்டாந்தப்படுத்தி நம் வாழ்வில் எகிப்தின் கிரியைகள் (நதி) இருக்குமானால் தேவனை கீழ்ப்படியாதவர்கள் உள்ளம் பாவத்தால் நிறைப்படுகிறது என்பதையும் அதனால் தேவனுடைய கோலாகிய வார்த்தையினால் நம்மை அடிக்கிறார். அப்போது நம் வாழ்க்கை பாவத்தின் நதியாக இருக்கிறது. அதுதான் பிசாசு. அப்போது நம் பிதா பிசாசு என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

யோவான்: 8:43,44

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

பிரியமானவர்களே; நாம் தேவ பிள்ளைகள் என்று சொன்னாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன், ஞானஸ்நானம் பெற்றேன், ஆவியின் அபிஷேகம் பெற்றேன், ஒழுங்காக சபைக்கு செல்கிறேன். காணிக்கை, தசமபாகம் கொடுக்கிறேன், சொப்பனம், தரிசனம் காண்கிறேன், தீர்க்கதரிசனம் உரைக்கிறேன், கிருபையால் நிறைந்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் சத்தியம் உங்களில் இல்லாவிட்டால், குறிப்பாக பாரம்பரிய நடத்தை, உலக வழிபாடுகள், முன்னோர்கள் கொண்டிருந்த இச்சைகளில் நடந்தால் அவர்கள் எல்லோரும் பிசாசின் பிள்ளைகள் அவர்கள் பிசாசினால் உண்டானவர்கள் அவர்கள் பிதா பிசாசு என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறது நாம் வாசிக்கிறோம்.

யோவான்: 8:47-51

தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.

நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பிரியமானவர்களே இதனை வாசிக்கிற அன்பான தேவனுடைய பிள்ளைகளே வேத வசனத்தை மிக கருத்தோடு வாசித்து தியானிப்பீர்களானால் உங்கள் ஆத்துமாவில் சந்தோஷம் கிடைக்கும். உலகம் கொடுக்காத சமாதானம் கிடைக்கும்.

என்னவென்றால் சத்திய வார்த்தையை யாராவது உலகத்தோடு ஒட்டி பேசுவார்களானால்;  அது தேவனுடைய சத்தம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் அந்த காரியம் உங்களுக்கு கிடைக்கும், அது தேவன் தந்த ஆசிர்வாதம் இல்லை. அது பிசாசினால் உண்டானது என்று நினைத்துக்கொள்ளுங்கள். தேவன் தருகிற ஆசீர்வாதம் நித்திய ஆசீர்வாதங்களுள்ளது,  பிசாசு தருவது மாயமானது. அது தற்காலிகமானது அதனால் அது எந்த காரியமாக இருந்தாலும் பின்னில் அது அதிக தீமையை விளைவிக்கும்.

ஆனால் தேவன் தருகிற ஆசீர்வாதமோ நித்திய நித்திய நாளாக சமாதானம் நமக்கு விளைந்து கொண்டிருக்கும். அதைத்தான்,

I யோவான்: 2:15-17

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

பிரியமானவர்களே:  இதிலிருந்து பிசாசின் நதி (எகிப்து) உள்ளத்திலிருந்து வராதபடி காத்துக் கொள்ள வேண்டும். தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் எகிப்தாகிய பாவ கிரியைகள் செய்வோமானால் அந்த நதியில் தேவன் தவளைகளை பிறப்பிக்கிறார். அதை இரண்டாம் வாதையாக தேவன் எகிப்தில் அனுப்புகிறார்.

எப்பொழுது என்றால் நதியின் தண்ணீர் இரத்தமாக மாறின பிறகு தேவன் ஏழுநாள் கொடுக்கிறார். அவன் மனம் மாறும் படியாக,

பின்பு கர்த்தர் மோசேயை பார்வோனிடத்தில் அனுப்பி,

என் ஜனங்களை எனக்கு ஆராதனை செய்யும்படி அனுப்பி விடு இல்லையென்றால் நதி தவளைகள் திரளாய் பிறப்பிக்கும், அவைகள் உன் வீட்டிலும், உன் படுக்கை அறையிலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், உன் மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும். இவ்விதமாக கர்த்தர் சொல்லி,

யாத்திராகமம்: 8:5-9

மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும் படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

யாத்திராகமம்: 8:10-15

அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.

தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலேமாத்திரம் இருக்கும் என்றான்.

மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.                 அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றமெடுத்தது.

இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

பிரியமானவர்களே இதனை வாசிக்கும் போது அநேகர் நிர்விசாரமாய் இந்த வார்த்தை எகிப்தியருக்கு என்று நினைத்து விடுகிறார்கள்.

எப்படியெனில் நாம் சத்தியத்தின் படி ஆவியோடும், உண்மையோடும், தேவனை ஆராதிக்காமல் இருந்தால் அந்த இருதயம் பார்வோனுடைய இருதயம் அது கடினப்படுகிறது. கஷ்டங்கள் வரும்போது கர்த்தரின் ஊழியக்காரர்கள் பொறுப்பேற்று ஜெபிக்கும் படியாக பார்வோனை போல தங்களை ஒப்புக்கொடுப்பது போல் ஒப்புக்கொடுத்து, பின் வாழ்க்கை இலவாகும்போது தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் இருதயத்தை கடினப்படுத்துகிற அநேக தேவ பிள்ளைகள் உண்டு. நாங்கள் இஸ்ரவேலர் தான் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். இஸ்ரவேலருக்கு இந்த வாதைகள் வரவில்லை. கர்த்தர் நம்மை சகல பாவத்தினின்று விடுதலையாக்கி வேறுபட்டு முற்றும் விட்டு விலகினவரை சார்ந்து கொண்டு தேவனை ஆராதிப்பதிப்போமானால் நாம் இஸ்ரவேலர். ஆனால் உலக பழக்கம், பாவ சுபாவங்கள், சத்தியம் இல்லாமை, மாம்ச கிரியைகள் இருக்குமானால் அவர்கள் எகிப்தியர்கள்.  அங்குதான் எகிப்தின் நதி, ஆத்துமா செத்து போகிறது. ஆனால் செத்து போன ஆத்துமாவினிடத்தில் அனுப்பப்பட்டது தவளைகள்,  நதியில் மாத்திரம் அது ஒதுக்கி விடப்பட்டதை பார்க்கிறோம். உள்ளத்திலிருந்து ஓடுகிற இந்த நதியில் வருவது தவளைகள்.

பிரியமானவர்களே கர்த்தருடைய சத்திய வார்த்தைகளை கேட்டு அதை ஏற்றுக்கொண்டவர்கள் உள்ளத்திலிருந்து. ஜீவ தண்ணீருள்ள  நதிகள் ஓடும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் வாயிலிருந்து பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார்.

ஆனால் வார்த்தைகளை கேட்டும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நடுவில் எகிப்தின் நதி ஓடும். இந்த நதி பிசாசின் நதி.  இவர்களை குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

யோவான்: 12:48

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.                                       குமாரனுடைய நாள் என்று சொல்லும்போது குமாரன் உலகத்தில் வந்த நாள்,  மேலும் தேவனுடைய வார்த்தையினால் குமாரன் நம் உள்ளமாகிய உலகத்தில் தோன்றின நாள் கடைசி நாள்.

அதனால் அந்த நாள் நியாயதீர்ப்பின் நாள் கீழ்படியாதவர்களுக்கு.  அதனால்,

வெளிப்படுத்தல்: 16:12-14

ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.

அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

பிரியமானவர்களே நம்முடைய ஆவிக்குரிய அனுபவத்தில் மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். எப்படியும் நாம் இஷ்டம் போல் நடந்தால் இப்படிப்பட்ட ஆவிகள் நம்மை வஞ்சித்துவிடும். கர்த்தர் வஞ்சிக்கிற ஆவிக்கும் இடம் கொடுக்கிறார். இவ்விதம் அநேக கர்த்தரின் ஊழியக்காரர்கள்,  அவர்கள் மூலம் விசுவாசிகள்,  வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  இதனை வாசிக்கிற அன்பானவர்களே எச்சரிப்போடு காணப்படுங்கள். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                        

-தொடர்ச்சி நாளை.