Aug 02, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 90:15 

தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

 தேவனுடைய வார்த்தையினால் மனுஷன் பிழைப்பான்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் தேவ பிள்ளைகள் அநித்தியமான பாவ சந்தோஷங்களை விட்டு விலக வேண்டும் என்று கர்த்தர் மோசே மூலம் நமக்கு திருஷ்டாந்தபடுத்திக் காட்டுகிறார். அவர்கள் தான் நித்திய ராஜ்யத்துக்கு பாதை காட்டி, ஜனங்களை நித்திய ராஜ்யத்தின் ஆராதனைக்கு, ஆயத்தப்படுத்தி ஆத்துமாக்களை பாவத்தின் அடிமையினின்று விடுதலையாக்க முடியும் என்பதை நமக்கு பழைய ஏற்பாட்டில், மோசேயையும் மோசே மூலம் இஸ்ரவேல் சபையை நமக்குத் தெளிவாக திருஷ்டாந்தப்படுத்துகிறார். அதனால் தான் அதற்கு ஏற்றவராக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பி, பின்பு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஆவியை நமக்குள் அனுப்பி பாவத்தினின்றும், அக்கிரமத்தினின்றும் நம்மை விடுதலையாக்கி ஆத்தும மீட்பை நமக்கு தேவன் தந்தருளுகிறார். அதனால்தான்,

கலாத்தியர்: 4:5,6

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

இவ்விதமாக குமாரனுடைய ஆவியை தேவன் நம் இருதயத்தில் அனுப்பும் படியாகவே தேவன் மோசே, ஆரோனை எகிப்திற்கு அனுப்பி நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி அற்புதங்களை செய்யும்படி சொல்கிறார். இந்த அற்புதங்கள் எல்லாம் தேவன் குமாரனுடைய ஆவியினால் நம் உள்ளத்தில் செய்கிற மாற்றங்கள் அவ்வித கஷ்டங்கள் நம் வாழ்வில் வரும் போது நாம் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு கிருபாசனத்தண்டை சேருவோம்.

எபிரெயர்: 4:16

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

மோசேக்கு உதவியாக,

யாத்திராகமம்: 4:27

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவ பர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.

பின்பு மோசே கர்த்தர் சொன்ன எல்லா வார்த்தைகளையும், அடையாளங்களையும் ஆரோனுக்கு தெரிவித்தான். பின்பு ஆரோன் எல்லா வார்த்தைகளையும், அடையாளங்களையும் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக செய்தான். அப்போது,

யாத்திராகமம்: 4:31

ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.

பிரியமானவர்களே தேவனை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால், தேவனுடைய வார்த்தைகளை நாம் கேட்கும் போது நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவர்கள் தான் தேவனைத் தொழுது கொள்ளுகிறோம்

 எபிரெயர் 11:1-3

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்.

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

இதனை நாம் பார்க்கும் போது நாம் தேவனுடைய வார்த்தைகளை  விசுவாசிப்போமானால் நாம் காணாத தேவனை காண்கிறோம் என்பது நிச்சயமுமாயிருக்கிறது. அதனால் தான்,

I யோவான்: 4:12

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (இது தான் காணப்படாதவைகளின் நிச்சயம் என்று எழுதப்பட்டிருக்கிறது).

பிரியமானவர்களே நாம் பார்க்கும் போது வெளி உலகமும், உலகத்திலுள்ளவைகளும் தேவன் வார்த்தையினால் சிருஷ்டித்தார் என்பது வேத வசனத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நம்மையும் தேவன் உலகங்கள் என்று சொல்கிறார். நாம் முதலில் உண்டாக்கப்படும் போது அவர் வார்த்தை தான் நம்மை உலகமாக உண்டாக்கிற்று.

எபிரெயர்: 11:3

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

தோன்றப்படுகிறது புது சிருஷ்டி (அவர்தான் கிறிஸ்து) அதை தான் கர்த்தர் சொல்லுவது,

ஏசாயா: 43:19-21

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.                                                           

 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

நாம் உலகமாக இருக்கிறோம் என்பதையும் நாம் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த உலகமாகிய நம் உள்ளத்திலே தேவன் தோன்ற பண்ணுகிற புது சிருஷ்டி தான் கிறிஸ்து. அவ்விதம் உள்ளவர்களை தான், நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு, வனாந்தரத்திலே தண்ணீர்களையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் என்று சொல்கிறார். அப்போது கிறிஸ்துவின் ஆவி நம்மளில் வரும் போது நாம் எந்த கிரியைகள் உள்ளவர்களாக பழைய வாழ்க்கையில் இருந்தாலும் கர்த்தரை கனம் பண்ணுவோம். அதைத்தான் தேவன் காட்டு மிருகங்களும், வலு சர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம் பண்ணும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவ்விதம் தங்கள் இருதயத்தில் மாற்றம் வருகிறவர்கள் தேவனை துதித்து கொண்டிருப்பார்கள்.

இவையெல்லாம் நாம் நன்றாக தியானித்து நம் வாழ்க்கை புது திருப்பத்தை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும். இதற்கு தான் தேவன், மோசே, ஆரோன் என்பவர்களிடத்தில் அவருடைய வார்த்தையும், அடையாளத்தையும் காட்டி அனுப்புகிறதை பார்க்கிறோம். அப்போது அந்த வார்த்தைகளை விசுவாசித்து கர்த்தரை தலை குனிந்து தொழுதுக்  கொள்கிறார்கள்.

இவ்விதம் நம்மை தேவனுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறோமா? சற்று சிந்தியுங்கள்.

எபிரெயர்: 11:2

அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்.

எபிரெயர்: 1:1-3

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

பிரியமானவர்களே உலகங்களாக தேவன் நம்மை அவருடைய வார்த்தையினால் உண்டாக்கி பின்பு அந்த வார்த்தையானது நம்முடைய உலகமாகிய உள்ளத்தில் மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாக கிறிஸ்து தோன்றி, நம்மளில் இருக்கிற சர்வத்தையும் அவருடைய வல்லமையுள்ள வசனத்தினால் (கிறிஸ்துவினால் ) தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய உள்ளத்தில் இருக்கிற சகல பாவங்களையும் நீக்கும் சுத்திகரிப்பை நமக்குள் உண்டு பண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்து உட்காருகிறார். இவ்விதமாக தேவன் நம் உள்ளமாகிய தேவனுடைய சிங்காசனத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமையின் பிரகாசமுமாய் வீற்றிருக்கிறார்.

இவ்விதமாக இஸ்ரவேலர் நடுவில் வீற்றிருக்கும் படியாக பார்வோனின் அதிகாரம் முழுமையும் அழித்து தேவன் எகிப்தை வைத்து நம்மைத் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.

இவ்விதமாக தேவனுடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிவோமானால் மகிமையின் தேவன் நம்மளில் பிரசன்னமாகி சகலத்தையும் நம்மளில் தாங்குகிறவராக செயல்படுவார். நாம் ஒப்புக் கொடுத்து தேவனுடைய எல்லா வார்த்தைகளையும் விசுவாசிப்போமானால், நாம் பிழைத்து இருப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.         

-தொடர்ச்சி நாளை.