தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

உன்னதப்பாட்டு 4:11 

என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா. 

உதட்டின் மாற்றங்கள்:- நன்மையான உதடுகள், தீமையான உதடுகள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்த வேதப்பகுதியில் நன்மையானவைகளை பேசும் நாவையும்,

தீமையானவைகளை பேசும் நாவையும் பற்றி தியானித்தோம். நம்முடைய முந்தின பாவ பழக்க வழக்கங்கள் எல்லாம் மாற்றப்பட்டு தேவன் நமக்கு புதிய நாவாக புதிய சாயலான தேவசாயலை நமக்கு சிருஷ்டித்து அந்த சிருஷ்டிப்பினால் தேவன் நமக்கு புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு அருளி நம்மை ஆசீர்வதித்து, நம்மை ஆசீர்வாதத்தின் பாத்திரமாக்கி நம்மை தெரிந்துகொண்டு, தேவன் நம்மளில் இருந்து அவருடைய வேலையை அவர் செய்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார். இதற்கு நம்மை அச்சாரப்படுத்துகிறவர் நம் தேவன்.

மேலும் நாவை தேவன் தொட்டு புதிய நாவாக மாற்றப்பட நம் உதடு தான் தேவன் முதலில் அவருக்கென்று ஆயத்தப்படுத்துகிறார்.

அதனால்,

ஏசாயா 6:5-7

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து என்னிடத்தில் பறந்து வந்து,

அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.                      ஏனென்றால் ஏசாயா ஒரு தேவ தரிசனம் கண்டு தன்னுடைய உதடை தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுக்கிறான். அப்போது தேவன் உதட்டை தொட்டு அக்கிரமம் நீக்கி, பாவம் நிவிர்த்தியானது என்று சொல்கிறார். இவ்விதமாக இதனை வாசிக்கும் போதே நாம் தேவனிடத்தில் உதட்டையும் ஒப்புக் கொடுப்போம். தேவன் அவ்விதம் நம்மையும் விடுவித்து இரட்சிப்பதை நாம் அனுபவிக்க முடியும்.

இனி நாம் நன்மையான உதடு, தீய உதடை நாம் தியானித்து எல்லாரும் தீமையான உதட்டை விட்டு, புதிய உதட்டை (நன்மையான) உதட்டை பெற்றுக் கொள்ள முன் வருவோமா?

 நன்மையான உதடு:-

1.  நீதிமொழிகள் 16:13   நீதியுள்ள உதடுகள், ராஜாக்களுக்கு பிரியம். இந்த உதடு நிதானமாய் பேசும்.

2.  யோபு 33:3    சுத்தமான உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.

3.  யோபு 32:20   பிரதியுத்தரம் சொல்லும் உதடு ஆறுதலடையும்.

4.  சங்கீதம் 16:4   அந்நிய நாமத்தை உச்சரிக்காத உதடு.

5.  சங்கீதம் 45:2   அருள் பொழியும் உதடு.

6.  சங்கீதம் 51:15   தேவன் திறந்தருளும் உதடு.

7.  சங்கீதம் 63:3    தேவனை துதிக்கும் உதடு.

8.  சங்கீதம் 71:23  பாட்டில் கெம்பீரித்து மகிழும் உதடு.  யோபு 8:21     கெம்பீர உதடு                                                                                                                  

9.  நீதிமொழிகள் 10:21   நீதிமானுடைய உதடுகள் அநேகரை போஷிக்கும்.  நீதிமொழிகள் 10:32   நீதிமானுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்.

10. நீதிமொழிகள் 10:13    ஞானம் விளங்கும் உதடு. (புத்திமான்)

11. நீதிமொழிகள் 12:19   சத்திய உதடு என்றைக்கும் நிலைத்திருக்கும்.

12. நீதிமொழிகள் 14:3   ஞானவான்களின் உதடு அவர்களை காப்பாற்றும்.

13. நீதிமொழிகள் 16:10    திவ்விய வாக்கு பிறக்கும் உதடு.

14. நீதிமொழிகள் 17:28   தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான்.

15. நீதிமொழிகள் 20:15  அறிவுள்ள உதடு விலையுயர்ந்த இரத்தினம்.

16. 1 சாமுவேல் 1:13   அசைந்த உதடுகள்.  யோபு 16:5   உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.

17. யோபு 13:6   விசேஷித்த உதடு.

18. யோபு 23:12   கற்பனையின் உதடு.

19. சங்கீதம் 17:1 கபடமில்லாத உதடு.

20. சங்கீதம் 21:2   விண்ணப்பத்தின் உதடு.

21. நீதிமொழிகள் 22:11   இனிமையான உதடு.  நீதிமொழிகள் 22:18  இனிமையான உதடு.

22. நீதிமொழிகள் 23:16   செம்மையானவைகளை பேசும் உதடு.

23. நீதிமொழிகள் 24:26   முத்தமிடுகிற உதடு. (செம்மையான மறுமொழி சொல்வது).

24. உன்னதப்பாட்டு 4:3   சிவப்பு நூலுக்கு சமானமான உதடு.

25. உன்னதப்பாட்டு 4:11   தேன் ஒழுகும் உதடு.

26. நீதிமொழிகள் 8:6   உத்தம காரியங்களை வசனிக்கும் உதடு.

27. சங்கீதம் 63:5   ஆனந்த களிப்புள்ள உதடு.

28. சங்கீதம் 119:13   நியாயத்தீர்ப்புகளை விவரிக்கும் உதடு.

29. நீதிமொழிகள் 16:21   உதடுகளின் மதுரம் கல்வியை பெருக பண்ணும்.

30. உன்னதப்பாட்டு 5:13   லீலி புஷ்பங்களை போன்ற உதடு.

31. உன்னதப்பாட்டு 7:9   உறங்குகிறவர்களை பேசப்பண்ணுகிற உதடு.

32. ஏசாயா 57:19   சமாதானம், சமாதானம் கூறும் உதடு.

33. ஓசியா 14:2   உதட்டுகளின் காளை.

34. நீதிமொழிகள் 17:7  மேன்மையானவைகளை பேசும் உதடு. (மூடனுக்கு தகாது)

இவ்விதமான நன்மையான உதடுகள் நமக்கு விளங்க வேண்டும். முதலில் உதடை தேவன், தொட்டு தொடும் போது, நாவானது புதியதாக்கப்பட்டு பரிசுத்தமாக்கபடுகிறது. நாவு பரிசுத்தபடும் போது நம் வாய் தேவனுடைய வாயாக மாறி தேவனுக்குரிய காரியங்களை குறித்து நாம் பேசுவோம். அவ்விதம் உதடு, நாவு, வாய் விளங்கும் போது அது நம்முடைய கையின் கோலாக இருக்கிறது. இதனை கொண்டு நம் ஆத்துமா  விடுதலை பெற்று கிறிஸ்துவின் சுதந்தரராக முடியும்.

தீமையான உதடுகள்:-

1. நீதிமொழிகள் 8:7   ஆகாமிய உதடுகள் அருவருப்பானது.

2. நீதிமொழிகள் 12:22  பொய் உதடுகள். உதடு  நீதிமொழிகள் 10:18   பகையை மறைக்கிற உதடு

3. நீதிமொழிகள் 13:13   விரிவாய் திறக்கிற உதடு. (கலக்கமடைவான்)

4. நீதிமொழிகள் 12:13  துன்மார்க்கரின் உதடு. துரோகம்.

5. நீதிமொழிகள் 7:21   வேசியின் உதடு. (மதுரவாக்கினால் இணங்க பண்ணும்).

6. நீதிமொழிகள் 18:6  மூடனுடைய உதடுகள் விவாதத்தில்  நுழையும்  நீதிமொழிகள் 18:7   மூடனுடைய  உதடு

7. நீதிமொழிகள் 19:1  மாறுபாடான உதடு.

8. நீதிமொழிகள் 14:23  வறுமையை உண்டாக்கும் உதடு.

9. சங்கீதம் 140:3  விரியன் பாம்பின் விஷ உதடு.

10. சங்கீதம் 140:9   தீவினையின் உதடு.

11. சங்கீதம் 59:7   பட்டய உதடு.

12. சங்கீதம் 59:12   பாவ உதடு. (சாபம் போடுதல், பொய், பெருமை).

13. சங்கீதம் 106:33   பதறி பேசுகிற உதடு.

14. யாத்திராகமம் 6:12  விருத்தசேதனமில்லாத உதடு.

16. நீதிமொழிகள் 16:30   தீமை செய்யும் உதடு. (உதட்டை கடிக்கிறான்).

17. சங்கீதம் 12:2,3   இச்சக உதடு.

18. சங்கீதம் 34:13  கபட்டு வசனிப்பின் உதடு.

19. நீதிமொழிகள் 5:3  பரஸ்திரீயின் உதடு. (தேன்கூடு போல் ஒழுகும்). 

20. நீதிமொழிகள் 16:27  எரிகிற அக்கினி போன்ற உதடு.

21. நீதிமொழிகள் 17:4  அக்கிரம உதடு. (துஷ்டனுடையது).

22. நீதிமொழிகள் 20:19  அலப்புகிற உதடு.

23. நீதிமொழிகள் 24:28   வஞ்சக உதடு.

24. நீதிமொழிகள் 26:23   தீய நெஞ்சம் உள்ள உதடு.

25. நீதிமொழிகள் 26:24   சூது பேசும் உதடு.

26. ஏசாயா 6:5   அக்கிரம உதடு.

27. ஏசாயா 28:11   பரியாச உதடு.

28. ஏசாயா30:27   சினத்தால் நிறைந்த உதடு.

29. ஆபகூக் 3:16   துடிக்கும் உதடு.

30. ஏசாயா 29:13 தேவனை   கனம்பண்ணும் உதடு (மனுஷ கற்பனை)  மத்தேயு 15:8  கனம்பண்ணும் உதடு (மனுஷ கற்பனை)

பிரியமானவர்களே மேற்கூறிய தீமையான உதடுகளை தேவன் நம்மை விட்டு மாற்றும் போது தான் தூய ஆவியாகிய தேவன் நம்மளில் வந்து வாசம்பண்ணி, நாம் ஒவ்வொருவரும் (பரலோக) தேசத்தின் நன்மையை புசிக்க முடியும். அதனால் இந்த நாளில் இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் தம் தம் உதட்டை தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் நிச்சயம் நம்மை புதுப்பிப்பார்.

இவ்விதமாக நாம் நம்மை ஒப்புக் கொடுப்போமானால் நம்மை தேவன் திடப்படுத்துவார் சமாதானம் தந்தருள்வார். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                            

-தொடர்ச்சி நாளை.