தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

கொலோசெயர்: 3:9,10

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

நாவின் மாற்றங்கள்:- நன்மையான நாவுகளும், தீமையான நாவுகளும்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே முந்தின நாளில் நாம் தியானித்து வந்ததான வேதப்பகுதியில் நாம் ஒவ்வொருவருடைய வாயும் எப்படி இருக்க வேண்டும். நன்மையான வாயாக நம்முடைய வாய் இருக்குமானால் நீதிமான் என்று நம்மை தேவன் தீர்ப்பார். தீமையான வாயாக நாம் இருப்போமானால் குற்றவாளி என்று தேவன் நம்மை தீர்ப்பார். 

மேலும் இந்த நாளில் நம் நாவை பற்றி தியானிக்க போகிறோம். நாவானது அடங்காததும், பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது என்று பார்க்கிறோம். அதனால் தான் தேவன் காத்திருந்தவர்கள் நடுவில் ஒவ்வொருவருடைய நாவிலும் தொடுகிறார். புதிய நாவை தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார். இந்த வேளையில் நம் நாவை தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுப்போம். எப்படி ஒப்புக் கொடுப்போம் என்றால்,

சங்கீதம் 39:1

என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

நம் உள்ளத்தில் துன்மார்க்கன் இருப்பானானால் நம் நாவு தீமையானவைகளை பேசும். அதனால்தான்,

சங்கீதம் 139:19,20

தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.                                     

அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.

இந்த சங்கீதப்பகுதி எவற்றைக் காட்டுகிறது என்றால், மனிஷர்களுடைய உள்ளங்களில் சத்துருக்களாகிய துன்மார்க்கக்கூட்டங்கள், பல பரிகாசங்கள், மேலும் இச்சகமான வார்த்தைகளை பேசுகிற பரஸ்திரீயின் கிரியைகள், அகங்கார கூட்டங்கள், அநேக தீய பழக்க வழக்கங்கள் உடைய கூட்டங்களாகிய தீய கிரியைகள் நிறைந்த பெரிய சாத்தானுடைய கூட்டங்கள் உண்டு.

இவையெல்லாவற்றையும் தேவன் நம் நடுவில் வாசம்பண்ணி அவற்றை ஆழித்தரானால் மட்டுமே நம் வாழ்க்கை தேவனோடே ஐக்கியப்பட்டிருக்க முடியும். இவையெல்லாமே இரத்தப்பிரியர்கள் அதனால் தான் சங்கீதக்காரன் பாடுகிறான். கர்த்தாவே நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும் இரத்தப்பிரியரை என்னைவிட்டு அகன்று போங்கள்.

இவ்விதமான கிரியைகள் நம்மை விட்டு அகன்று போனால் மாத்திரமே நம் நாவில் பிறக்கும் வார்த்தைகள் தேவனுக்கேற்ற மதுரமான வார்த்தைகளாக இருக்கும். அதைத்தான்,

சங்கீதம் 139:4,5

என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

தேவன் நம்மேல் அவருடைய கரத்தை வைத்து நம்மை புதியதாக சிருஷ்டிக்கிறார். அவ்விதமான சிருஷ்டிப்பில் நாம் தேவனை துதிக்கும் நாவை தேவன் நமக்கு தருகிறார்.

சங்கீதம் 139:14

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

பிரியமானவர்களே நாம் பிரமிக்கத்தக்க அதிசயம் என்னவென்றால்; நம் உள்ளான மனுஷனின் நாவு, புதிய நாவு, அது கிறிஸ்துவின் நாவு, பரிசுத்தமான நாவு, தேவனிடத்தில் பேசும் நாவு, அவரோடு பழகும் நாவு.  எப்படியென்றால் பெந்தேகொஸ்தே என்னும் நாள் வந்த போது எல்லோரும் சுமார் நூற்றிருபது பேர் கூடியிருந்த அறையில் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

அப்போஸ்தலர் 2:3

அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

எல்லோரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, அவரவர் தங்களுக்குத் தந்தருளின பாஷையிலே பேசத் தொடங்கினார்கள்.

இதனை கேட்ட எல்லாம் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். இது தான் தேவன் நம்மை பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்குகிறார். இனி இதனை வாசிக்கிற நாம் இவ்வித நன்மையான நாவை பெற்றுக் கொள்ள நம்மை தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுப்போம்.

நன்மையின் நாவு:- (புதிய நாவு)

1. சங்கீதம் 37:30  நியாயத்தின் நாவு;

2. நீதிமொழிகள் 31:26  தயையுள்ள போதக நாவு

3. சங்கீதம் 126:2  ஆனந்த சத்தத்தினால் நிறைந்திருக்கும் நாவு;

4. சங்கீதம் 51:14  நீதியை கெம்பீரமாய் பாடும் நாவு; 

5. சங்கீதம் 34:13  பொல்லாப்புக்கு விலக்கி காக்கும் நாவு;

6. சங்கீதம் 35:28  நீதியையும், துதியையும் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் நாவு;

7. நீதிமொழிகள் 21:23 ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கி காக்கும் நாவு;

8. சங்கீதம் 66:17  தேவனை புகழுகிற நாவு;

9. ஏசாயா 30:27  பட்சிக்கிற அக்கினி போன்ற நாவு;

10. ஏசாயா 32:4  தெளிவாய் பேசும் நாவு;(தெற்று வாய்)

11.ஏசாயா 35:6   கெம்பீரிக்கும் நாவு; (ஊமையன்)

12.அப்போஸ்தலர் 2:26 களிகூரும் நாவு;

13. அப்போஸ்தலர் 2:3 அக்கினிமயமான நாவுகள் போல் பிரிந்திருக்கும் நாவுகள்;

14. சங்கீதம் 45:1  நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி;

15. நீதிமொழிகள் 10:20  நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;

16. நீதிமொழிகள் 15:2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;

 17. நீதிமொழிகள் 15:4  ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்;

18. நீதிமொழிகள் 12:18  ஞானமுள்ளவர்களின் நாவு ஔஷதம்;

19. நீதிமொழிகள் 18:21  மரணமும்,ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது;

20. உன்னதப்பாட்டு 4:11   உன் நாவின் கீழ் தேனும்,பாலும் இருக்கிறது;

21. நீதிமொழிகள் 16:1   பிரதியுத்தரம் சொல்லுகிற நாவு;

பழைய நாவு:-(முந்தின நாவு) தீமையான நாவுகள்:-

1. சங்கீதம் 12:3  பெருமைகளை பேசுகிற நாவை கர்த்தர் அறுத்து போடுகிறார்;

2. சங்கீதம் 15:3   புறங்கூறுகிற நாவு;

3. நீதிமொழிகள் 10:31   மாறுபாடுள்ள நாவு;

4. நீதிமொழிகள் 12:19   பொய் நாவு;

5. சங்கீதம் 140:3 சர்ப்பத்தின் நாவு;

6. நீதிமொழிகள் 17:4  கேடுள்ள நாவு;

7. சங்கீதம் 52:2  கபடு செய்யும் நாவு;

8. சங்கீதம் 57:4   கருக்கான பட்டய நாவு பிறரை புண்படுத்தும்;

9. சங்கீதம் 50:19   சற்பனையை பிணைக்கிற நாவு;

10. நீதிமொழிகள் 26:28   கள்ள நாவு;

11. சங்கீதம் 140:12  பொல்லாத நாவு;

12. சங்கீதம் 73:9  வானமட்டும் எட்ட பேசி, பூமியெங்கும் உலாவுகிற நாவு;

13. ஏசாயா 32:4  தெற்று வாயாருடைய நாவு;

14. ஏசாயா 35:6  ஊமையன் நாவு;

15. ஏசாயா 41:17  தாகத்தால் வறண்ட நாவு;

16. ஏசாயா 59:4  நியாயகேட்டை வசனிக்கும் நாவு;

17. எரேமியா 9:8  கூர்மையாக்கப்பட்ட நாவு;

18. புலம்பல் 4:4  மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளும் நாவு;

19. செப்பனியா 3:13  வஞ்சக நாவு;  

20. யாக்கோபு 3:8  அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததான நாவு;

21. நீதிமொழிகள் 17:20 புரட்டு நாவு

பிரியமானவர்களே, முந்தின பகுதியில் இரண்டு தோற்றங்களான நாவை நாம் வாசிக்கிறோம். முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நன்மையான நாவுகள் என்று சொல்லும் போது தேவன் நம்மை புது சிருஷ்டியாக சிருஷ்டித்து நம் உள்ளத்தில் புது சாயலை தந்து, நம் நாவை புதியதாக சிருஷ்டிக்கிறார். இந்த நாவுகள் நம்மை முழுமையும் சுத்தப்படுத்தி பரிசுத்தப்படுத்தும் இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அடுத்ததாக நாம் பார்ப்பது தீமையான நாவுகள். நாம் புது சிருஷ்டியாக மாறுவதற்கு முன்னால் இருந்த நம் பழைய நாவு (பாவ நாவு) அந்த நாவின் அத்தனை கிரியைகளும் மாறிப் புதிய நாவாக,  புது நன்மையான நாவாக மாறினால் மாத்திரமே நாம் பரிசுத்தமாக முடியும். அதனால் நம்முடைய பாவ நாவுகளில் ஏதாவது இந்த நாட்களில் இருக்கிறதா என்று இதனை வாசித்து தியானிக்கிற தேவனுடைய பிள்ளைகள் அவரவர் தன்னை தானே சோதித்து அறிந்து எல்லா வித பழைய பாவத்தின் நாவுகளை களைந்து போட்டு புதிய நாவை நாம் பெற்றுக்கொள்ள தேவனிடத்தில் நாம் யாவரும் மன்றாடி ஜெபிப்போம். தேவன் எல்லா பழைய நாவின் கிரியைகளை மாற்றி நமக்குப் புதிய நாவை தந்து நிச்சயம் ஆசீர்வதிப்பார். யாவரும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.   ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.    

-தொடர்ச்சி நாளை.