தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

உன்னதப்பாட்டு 5:16 

அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

வாய்களின் தோற்றங்கள்:- நன்மையான வாய்கள், தீமையான வாய்கள்:

பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம்முடைய வாய், நாவு, உதடு இவைகளை எவ்விதத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதை சில கருத்துகள் நாம் தியானித்தோம். மேலும் இந்த நாளில் வாய் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் எப்படிப் பட்டதாக இருக்க கூடாது என்று சில கருத்துக்கள் மட்டும் தேவ ஆவியினால் தியானிக்க போகிறோம். ஏனென்றால் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையினால் தேவன் நம்மை நீதிமான் என்றும், குற்றவாளி என்றும் தீர்க்கிறார். 

நன்மையான வாய்:-

1. சங்கீதம்: 49:3  என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

2. சங்கீதம்: 71:8  என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.

3. சங்கீதம்: 71:15  என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்;

4. சங்கீதம்: 145:21  என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; யோபு: 16:5 திடன் சொல்லும் வாய் 

5. சங்கீதம்: 66:14  என் வாயினால் சொல்லிய பொருத்தனைகளை உமக்கு செலுத்துவேன்

6. சங்கீதம்: 17:3  என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.

7. சங்கீதம்: 81:10  உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

8. சங்கீதம் 119:131   கற்பனைக்கு வாஞ்சிக்கிற வாய்

9. சங்கீதம் 37:30  ஞானத்தை உரைக்கும் வாய்

10. சங்கீதம் 51:15  கர்த்தரின் புகழை அறிவிக்கும் வாய்; சங்கீதம் 40:3 புதுப்பாடல் பாடும்  வாய்

11. நீதிமொழிகள் 10:11   நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;

12. எபேசியர் 6:20   சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கும் வாய்;    ஏசாயா 49:2  கூர்மையான பட்டயமான வாய்;

13. யோபு 40:4   கர்த்தருக்கு முன்பாக பொத்திக் கொள்ளும் வாய்;

14. நீதிமொழிகள் 31:9  நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்யும் வாய்;

15. நீதிமொழிகள்: 31:8  ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் திறக்கிற வாய்;

16. மீகா 7:5  திறவாத வாய் (எச்சரிப்போடு காணப்பட)

17. தானியேல் 10:16  திறந்து பேசுகிற வாய்;  நீதிமொழிகள் 8:7 சத்தியத்தை விளம்பும் வாய்;  எசேக்கியல் 29:21 தாராளமாய்ப் பேசும் வாய்.

18. சங்கீதம் 39:1  கடிவாளத்தால் (வசனத்தால்) அடக்கி வைக்கும் வாய்; நீதிமொழிகள் 11:12  அடக்கி வைக்கும் வாய்;  

19. சங்கீதம் 39:9 மவுனமாயிருக்கும் வாய்;  எசேக்கியேல்: 16:63  நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

20. சங்கீதம்: 78:2  என் வாயை உவமைகளால் திறப்பேன்;  மத்தேயு: 13:35 என் வாயை உவமைகளால் திறப்பேன்,

21. சங்கீதம்: 103:5  நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்;

22. நீதிமொழிகள்: 13:3  தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்;  நீதிமொழிகள்: 21:23  தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

23. எரேமியா: 1:9  தேவன் கரத்தால் தொடும் வாய் வார்த்தையால் நிரம்பும்.

24. எசேக்கியேல்: 3:2  தேவனுடைய சுருளை புசிக்கும் வாய்.

இவ்விதமாக தேவன் நமக்கு தரும் நன்மையான வாய்கள். நம் உள்ளத்தில் காணப்பட வேண்டும். ஆனால் தீமையான வாய்கள் அடுத்து தியானிப்போம்.

மத்தேயு 12:33-36

மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.                                                                                               

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அதனால் பிரியமானவர்களே நம்முடைய வாய் ஒரு போதும் பொல்லாதவைகளை பேசாதபடி நம் இருதயத்தை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

பொல்லாத வாய்:- (தீமையானவை பேசும் வாய்)

1. சங்கீதம் 63:11 பொய் பேசும் வாய்; (அடைக்கப்படும்) 

2. நீதிமொழிகள் 4:24  தாறுமாறானவைகளை பேசும் வாய்;

3. சங்கீதம் 59:12  பாவம் செய்யும் வாய்; (சாபம் போடுதல்)

4. நீதிமொழிகள் 5:3 பரஸ்திரீயின் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்;

5. யோபு 15:6  நம்மையே நாம் குற்றவாளி ஆக்கும் வாய்;

6. சங்கீதம் 10:7  கபடத்தின் வாய்;

7. சங்கீதம் 73:8  அகந்தையும், இறுமாப்புமாய் வானமட்ட எட்ட பேசும் வாய்;

8.  சங்கீதம் 35:21  ஆ, ஆ, ஆ, ஆ, விரிவாய் திறக்கிற வாய்;

9. யோபு 5:16  தீமையினால் மூடும் வாய்;  நீதிமொழிகள் 30:32   மேட்டிமையினால் பைத்தியமாய் நடந்து துர்சிந்தையுள்ளவர்களாய் கையினால் வாயை மூடுதல்.

10. யோபு 7:11 அடங்காத வாய்;

11. சங்கீதம் 50:19  உன் வாயை பொல்லாப்புக்கு திறக்கிறாய்;

12. சங்கீதம் 107:42  நியாயக்கேட்டின் வாய்; 

13. நீதிமொழிகள் 8:13  புரட்டு வாய்;

14. நீதிமொழிகள் 10:31 மாறுபாடுளுள்ள வாய்; 

15. நீதிமொழிகள் 10:6  கொடுமையின் வாய்; 

16. நீதிமொழிகள் 24:7  மூடனுடைய வாய்;

17. நீதிமொழிகள் 30:20  விபச்சார ஸ்திரீயினுடைய வாய் அவள் தின்று தன் வாயை துடைத்து நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 

18. ஏசாயா 6:7 அக்கிரமம் செய்யும் வாய்;

19.  வெளிப்படுத்தல் 12:15  பாம்பின் வாய்;  நீதி 15:28  தீமைகளை கொப்பளிக்கும் வாய்

20. வெளிப்படுத்தல் 12:16  பூமியின் வாய்; 

21. வெளிப்படுத்தல் 13:2  சிங்கத்தின் வாய்;

22. வெளிப்படுத்தல் 13:5  பெருமையானவைகளையும், தூஷணங்ளையும் பேசும் வாய்;

23.  சங்கீதம் 17:10 வீம்பு பேசும் வாய்;

24.  சங்கீதம் 144:8  மாயையை பேசும் வாய்;

பிரியமானவர்களே மேற்கூறிய தீமையான வாய்கள் நம் உள்ளத்தில் வளராதபடி நாம் பாதுகாப்போடு, தேவனுடைய அபிஷேகம் பெற்று நன்மையாகிய புதிய வாய், நாம் பெற்றுக்கொள்வோமானால் :நம்மையும் அவர் தெரிந்தெடுத்து அவர் தம்முடைய வேலையை நம்மளில் இருந்து செய்வார். அதனால் அவருடைய நாமம் நம் மூலம் தேசங்களில் மகிமைப்படும். நம்மையும் தேவன் ஆசீர்வதிப்பார். இவ்விதமாக நன்மையானவைகளை பேசும் வாயாக நாம் யாவரும் மாறும்படியாக தேவனிடத்தில் நம்மை முழுமையும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.