புதிய நாவை பாதுகாத்தல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jul 28, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு: 12:37

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

புதிய நாவை பாதுகாத்தல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்ததான வேத பகுதியில் புதிய நாவு, புதிய வாய், புதிய உதடு (தேவனுடைய வாய், நாக்கு, உதடு) என்று நாம் புரிந்து கொண்டோம். மேலும் இந்த காரியங்களை நாம் பெற்றுக் கொண்டால் தேவனுடைய நல்ல ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியும். அதென்னவெனில் நாம் தேவனோடு பேசவும்,தேவன் நம்மோடு பேசவும், நாம் தேவனிடத்தில் பழகவும், தேவன் நம்மிடத்தில் பழகவும் மேலும் விலையுயர்ந்த இரத்தினங்களால் தேவன் நம் நாவை ஆசீர்வதிப்பார். அவ்விதம் ஆசீர்வாதம் நாம் பெற்றுக் கொள்ளும் போது உதடுகளிலிருந்து தேன் ஒழுகும். அதைத்தான்,

உன்னதப்பாட்டு: 4:11

என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.

 பிரியமாவர்களே நம் வாய், நாவு, உதடு மிக முக்கியம் ஏனென்றால் நாம் பேசுகிற பேச்சினால் தேவன் நம்மை நியாயம் தீர்க்கிறதினால்; நாம் பேசுகிற ஒவ்வொரு  வார்த்தையும் தேவனுக்கேற்ற ஞானமுள்ள வார்த்தையாக இருக்கவேண்டும். இல்லாவிடில் நாம் எல்லாவார்த்தைகளுக்கும் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

மேலும் கர்த்தர் நமக்கு இரண்டு வித மரம் காட்டுகிறார். நல்ல மரம், கெட்ட மரம். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது. கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது, என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த காரியம். இப்போது நம்மை நாம் சோதித்து அறிவோம். நாம் பேசுகிற பேச்சிலிருந்து நல்ல மரமா, கெட்ட மரமாக நாம் இருக்கிறோமா என்பதை நம்மை நாமே சோதித்து அறிவோம்.                                                   

நாம் பேசும் பேச்சு நம் உள்ளத்திலிருந்து தான் புறப்பட்டு வருகிறது.நம் உள்ளம் கிறிஸ்துவாக இருந்தால் கிறிஸ்துவுக்கேற்ற கனிக் கொடுக்கிற மரமாக நாம் காணப்படுவோம். நம் உள்ளம் பிசாசாக இருக்குமானால் பிசாசின் கிரியைகேற்ற கெட்ட கனிகளை நாம் கொடுத்துக் கொண்டிருப்போம். இப்போது நம்மையே பரிசோதித்து தேவ சமூகத்தில் விழுந்து கொடுப்போம். அப்போது தேவன் நல்ல மரமாக நல்ல கனிகளைக் கொடுக்கிற மரமாக தூக்கி நிறுத்துவார். நல்ல கனிக் கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சிந்திப்போம் அக்கினி என்பது நியாயதீர்ப்பின் அக்கினியும் இருக்கிறது.அது தான் இப்போது நம் வாழ்க்கையில் சமாதானம் இல்லாமல் அக்கினி வேதனையில் இருக்கிறோம் என்று நம்மளில் அநேகர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத்தான்,

மத்தேயு: 12:30,31

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

இவை ஏன் என்று தியானிப்போம். ஆவியானவரை ஒருவன் தூஷிக்கிறானென்றால் அவன் உள்ளத்தில் தேவ பயம் இல்லை. கிறிஸ்து அவன் உள்ளத்தின் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படியெனில் யார் தூஷிக்கிறார்கள் என்றால், பெலிஸ்தன் இஸ்ரவேலரை நிந்தித்து தூஷிக்கிறான். பாபிலோன் வேசி தூஷிக்கிறதை பார்க்கிறோம்.

வெளிப்படுத்தல்: 17:1-3

ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.

இவை என்னவென்றால் நம் உள்ளம் பூமியாகயிருக்கிறது, எதனால் என்று நாம் சில நாட்களுக்கு முன்பாக தியானித்தோம். உண்மையான இரட்சிப்பை ஆத்துமா பெற்றுக்கொள்ளாதபடி பூமிக்கடுத்தவைகளை பின்பற்றுகிறதினால் ஆத்துமா மண்ணோடு மண் ஒட்டியிருக்கிறது. அதனால் தேவன் பூமிக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறார். காரணம் என்னவென்றால் அவர்கள் உள்ளத்தில் இருக்கிறதான மிருகத்தை பற்றி தேவன் பத்மு தீவில் தரிசனம் கொடுக்கிறார். மேலும் தேவன் நம்மை நியாயத்தீர்த்து அழிக்க வேண்டிய காரியங்களை நம் உள்ளத்தில் அழித்து, புது சிருஷ்டியாக கிறிஸ்து வெளிப்பட்டால் தான், நம்முடைய இரட்சிப்புக்கேற்ற பலன் தேவன் நமக்குத் தருவார்.

வெளிப்படுத்தல்: 17:4-5

அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

 பிரியமானவர்களே நாம் வாயின் வார்த்தைகள் இன்பமான வசனங்களை வசனிக்க வேண்டும். அவ்விதம் வசனிக்காமல் வசனங்களுக்கும், தேவ ஆலோசனைகளுக்கும் மாறாமல் நாம் பேசுவோமானால் நாம் பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறோம். யாரெல்லாம் தூஷிக்கிறார்களோ அவர்கள் உள்ளத்தில் இருப்பது தான் மேற்கூறிய மிருகம். அந்த மிருகம் தூஷண நாமங்களால் நிறைந்ததாக இருக்கிறதை நாம் பார்க்கிறோம்.

அந்த நாமத்தை தரித்திருக்கிறவர்கள் தேவனைத் தூஷிப்பார்கள். அவர்களுடைய அலங்காரங்கள் பாபிலோன் வேசியின் அலங்காரத்தை போல் இருக்கும். அவள் கையில் தான், மக்களின் ஆத்துமா தான், அந்த பொற்பாத்திரம். அவள் உள்ளத்தில்  இருந்து கிறிஸ்துவை  தூஷித்து சத்தியத்தின் படி  நடக்கவிடாமல் மக்களை வஞ்சித்து, மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகள் வரும் போது அதை மதுவாக கலந்து குடிக்க கொடுப்பாள். அன்றியும் ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகள் உலக வழிபாடுகள், உலக இன்பங்கள், உலக ஆசைகள், உலக அலங்காரங்கள் மற்றும் மோகம், துர் இச்சை, பொருளாசை இன்னும் அருவருப்பான காரியங்களை விடாமல் இருக்கிறதினால் உள்ளம் தூஷண நாமங்களால் நிறைந்து, உலக பிரகாரம் நாவு, உதடு பொல்லாதவைகளை பேசியும் கபடும், வஞ்சகமும்  நிறைந்ததாகவும், இவ்விதமான அநேக அருவருப்புகளால் நிறையப்பட்டிருக்கும்.

ஆனால் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் இவர்களோடே யுத்தம்பண்ணி ஜெயிப்பார்.

ஆனால் அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாய் இருப்பார்கள்.

இவ்விதமாக நம்மை தேவன் அழைத்து, அந்த அழைப்பிலிருந்து உண்மையை கண்டறிந்து தெரிந்துக் கொள்வார். அப்படிப்பட்டவர்களுக்கு வாயும் நாவும் உதடும் சுத்திகரித்து புதிய நாவை கொடுத்து தேவன் அவர்களோடு பேசியும், பழகியும் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் இந்த நாளில் இதனை வாசிக்கிற அன்பானவர்களே, நம் ,வாயையும் நாவையும் உதடையும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீண் வார்த்தைகளால் அலப்பாமல் நம்மை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். நம்மை பாதுகாப்போம். ஜெபிப்போம்.

 கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.           

-தொடர்ச்சி நாளை.