தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

எபிரெயர் 10:31 

ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 தேவனுக்கு கீழ்படியாதவர்கள் இருதயம் பாவத்தால் நிறையுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கர்த்தருடைய பிள்ளைகள் யாரையும் நாம் நிந்திக்கக் கூடாது என்றும், மேலும் நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்களாய் இருப்போம் என்றும் தியானித்தோம். அந்தபடி நாம்  அல்ல நம்மளில் தங்கியிருக்கிற மகிமையின் ஆவியானவர் நிந்திக்கப்படுகிறார். மேலும் நம்மளில் அவர் மகிமைப்படுவார் என்பதின் கருத்தை நாம் தியானித்தோம். அதற்கு தான் தேவன் மோசேயிடம் உன் கையை மடியிலே போடு என்று சொன்ன போது மோசே அந்தபடி செய்ய, கை உறைந்த மழையைப் போல வெண்குஷ்டம் பிடித்தது. மேலும்  மீண்டும் உன் கையை திரும்பவும் உன் மடியிலே போடு என்று சொல்ல அவன் தன் கையை திரும்ப மடியிலே போட அந்த கை மற்ற சதையை போல் ஆனது.

இதிலிருந்து நாம் தெரிய வேண்டும் நிந்தையை சுமப்போமானால் நாம் அல்ல நம்மளில் இருக்கிற மகிமையின் ஆவியானவர் மகிமைப்படுவார். நாம் நிந்தை சுமக்கமாட்டேன் என்று சொன்னால் நம் கிரியை பொல்லாததாய் இருக்கிறதினால் மகிமையின் ஆவியானவர் மகிமைப்பட முடியாது.

கீழ்படிந்து எல்லா நிந்தைகளையும் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் சுமந்தால் நம் தலைமுறை தலைமுறை தோறும் தேவன் மகிமைப்பட்டுக் கொண்டிருப்பார். 

பிரியமானவர்களே அடுத்தபடியாக நாம் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால், தேவன் மோசேயிடம் மேற்கூறிய இந்த இரண்டு அடையாளங்களையும் கண்டு அவர்கள் நம்பாமற்போனால் மூன்றாவதாக நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையில் இரத்தமாகும் என்றார்.                                                                                             

இதன் பொருள் என்னவென்றால் தேவன் நதியின் தண்ணீர் என்று சொல்லும் போது அது எகிப்தின் நதி, அந்த நதியின் தண்ணீர் மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக என்று சொல்ல  காரணம் என்னவென்றால் மேற்கூறிய தேவனுடைய அடையாளங்களை கண்டும், நம்பாமாலும், விசுவாசியாமலும் இருக்கிறவர்கள் உள்ளத்தில் ஓடுவது எகிப்தின் நதி. ஆனால் அந்த நதியில் தண்ணீர் நம்முடைய உள்ளமாகிய நிலத்தில்  ஊற்றப்படும் போது, எகிப்தின் கிரியை  உள்ளவர்கள் நிலமாகிய இருதயம் பாழான நிலமாக வெட்டாந்தரையாக இருக்கிறதினால் பாவக்கறைகள் (அசுத்தங்களால் நிறையபடுகிறது).

அதற்கு பின் மோசே கர்த்தரிடத்தில் நான் வாக்கு வல்லவன் அல்ல. நான் திக்கு வாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

பிரியமானவர்களே, இதுவரை நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தர் மோசேயிடம் சொன்னது அடையாளங்களை செய்து காட்டும்படியாக, நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைகளை கேட்டு விசுவாசித்தாலும், நம்பினாலும் கிரியைகள் உள்ளவர்களாக காணப்பட வேண்டும். ஆனால் மோசே பின்பு தன் வாயையும் நாவையும் தேவனுக்கு முன்பாக ஒப்படைக்கிறான்.

நாம் தினமும் நம் வாய், நாவு தேவனால் காக்கப்பட ,நாம் ஜெபித்து ,நாம் அல்ல, நம்முடைய வாய் அல்ல, நம்முடைய நாவு அல்ல, தேவனுடைய வாயாக, நாவாக, உதடாக இருக்க வேண்டும். நாம் தேவ சமூகத்தில் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது நம் உள்ளத்தில் இருப்பது மாத்திரமல்ல, நம் நாவாக, வாயாக, உதடாக தேவன் இருப்பார். வாய்-கிறிஸ்து, நாவு-கிறிஸ்து, உதடு-கிறிஸ்து (எல்லாம் தேவனுடைய வார்த்தை) யாக இருக்க வேண்டும். உலக காரியங்களுக்கு அல்ல பரலோகத்துக்குரியவைகளாக இருக்கவேண்டும்.

மேற்கண்ட தேவ வார்த்தைப் பிரகாரம் நம் வாய், நாவு ஒப்புக் கொடுப்போமானால்,

யாத்திராகமம் 4:11,12

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?                                                                       

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.

இதிலிருந்து நாம் யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய காரியம், நம்முடைய முழு சரீரத்தின் அவயவங்களை தேவனுக்காக நாம் ஒப்புக் கொடுத்து, வரும் போது தேவனுடைய வார்த்தைகளை தேவன் வாயிலே போடுகிறார். நம் நாவாக கிறிஸ்து செயல்படுவார். மேலும் நம் ஆவிக்குரிய கண்கள் குருடாயிருக்கிறவர்களுக்கு நம்முடைய தேவன் பார்வையளிக்கிறார்.

தேவன் மோசேயோடே சொன்ன பிறகும் மோசே,

யாத்திராகமம் 4:13

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.

அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.

நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளை போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.

அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.

இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.

கர்த்தர் மோசேயிடம் நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டுவதை போதிப்பேன் என்று சொல்கிற வார்த்தையை நாம் மிகவும் நன்றாக கருத்தோடு தியானிக்க வேண்டும். கோல் கரத்தில் வைத்துக் கொண்டு மோசே சொல்கிறான் நீர் அனுப்ப சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்று சொல்கிறான்.

பிரியமானவர்களே நாம் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியனாகிய நம்முடைய கர்த்தரும் ,இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நம்மோடு கூட இருக்கும் போது, நாம் சொல்லுகிறோம் யாரையாகிலும் அனுப்பும் என்று. நாம் எவ்வளவு தவறாக நடக்கிறோம். அதனால் தேவன் நம்மிடத்தில் மிகவும் கோபத்தோடு இருப்பார். இந்த நாட்களிலும் தேவன் அவருடைய வார்த்தைகளை நம் வாயில் தந்த பிறகு எத்தனை பேர் மற்றவர்களை எழுப்பும் என்று நாம் எழும்பாமல் மற்றவர்கள் எழுப்பும் படி ஜெபிக்கிறோம். அதற்கு தேவன் எழுப்பினது தான் பேச்சில் திறமையுள்ள ஆரோனை இன்றைக்கு நம் எல்லோருக்கும் தெரிய வேண்டும். ஆரோன் செய்தது கன்றுக்குட்டி. ஜனங்கள்  சொன்னாலும், செய்தது ஆரோன். அதனால் ஆரோன் மேல் மோசேக்கி கோபம் வந்தது. இன்றைக்கு வரையிலும் இஸ்ரவேலர் கன்றுக்குட்டிகளுக்கு பிரதானம் கொடுக்கிறார்கள். தேசம் தேவக் கோபத்தால் நிறைந்திருக்கிறது

இஸ்ரவேல் சபை  இன்றைக்கும் கன்றுக் குட்டிகளை செய்கிறார்கள், சமாதானம் இல்லாமல் நிலையற்ற ஒரு வாழ்க்கையாக கிறிஸ்தவ ஜீவிதங்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் தப்பிதங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கைப்பண்ணி ஒப்புக் கொடுப்போமா? நம் வாயையும், நாவையும், உதடையும் தேவசமுகத்தில் ஒப்புக்கொடுப்போம் அப்பொழுது தேவன் நம் வாயோடே இருந்து அவர் பேசுவார். நாம் உணர்வடைந்து, கீழ்ப்படிந்து இரட்சிக்கப்படுவோம் .கிருபையானது யாவரையும் தாங்கும்.

ஆனால் மீண்டும் மோசேயிடம் சொல்கிறார்.

யாத்திராகமம் 4:17 

இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.

நாம் யாவரும் கிறிஸ்துவினால் எழும்பி பிரகாசிப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.  

-தொடர்ச்சி நாளை.