Jul 21, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 86:16

என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி ,உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

சுவிகாரபுத்திரராகுதல் திருஷ்டாந்தம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம்  தியானித்த வேதப்பகுதியில் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு எடுக்கும் படியாக கர்த்தர் மோசேயை அழைக்கிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தர் அவனை அழைத்து அவனோடு பேசும் போது ,மோசே என் வாக்கை அவர்கள் நம்பார்கள் என்று கர்த்தரிடம் சொல்ல, கர்த்தர் உன் கையிலிருக்கிறது என்ன என்று கேட்கும் போது அவன் கோல் என்று சொல்கிறான். கோல் என்பது கிறிஸ்துவின் அடையாளத்தை காட்டுகிறது. ஏற்கனவே கோல் இருந்தவனை தேவன் அழைக்கிறார். மேலும் உன் கையை மடியிலே போடு என்கிறார். இந்த இரண்டும் கிறிஸ்துவின் அடையாளத்தை காட்டுகிறது.

என்னவென்றால் மோசேயின் கையில் இருந்த கோல் என்ன என்றால், அவன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்ப்பதற்காக கையில் கோல் வைத்திருக்கிறான் என்பது தெரிகிறது.

பிரியமானவர்களே, இது நாம் சாதாரணமாக ஏதோ உலக கதை என்று நினைத்து விடுவோம். இது கதையல்ல, தேவன் பழைய ஏற்பாட்டில், கிறிஸ்து மூலம் செய்கிற அடையாளத்தை திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார். இந்த கையில் இருந்த கோல் கிறிஸ்து.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் அவன் கரங்கள் நீதியால் நிறைந்திருந்தது. அந்த கரமும், கோலும் கிறிஸ்து என்பது தேவன் காட்டுகிற அடையாளம்.

ஏனென்றால் ஆடுகள் என்பது மனுஷர் ,அதை கர்த்தர் இஸ்ரவேல் சபையை மேய்ப்பதை குறித்து காட்டுகிறார். இயேசு கிறிஸ்து ஆடுகளை மேய்க்கும் போது, 

எசேக்கியேல் 34:28-31

இனி அவர்கள் புறஜாதிகளுக்கு கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.

தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

பிரியமானவர்களே மோசேயோடு கிறிஸ்து உண்டு என்பதை தேவன் திருஷ்டாந்தபடுத்தி தான் கிறிஸ்து சொல்கிறார். நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பது  நம் எல்லோருக்கும் தெரிய வேண்டும். ஏனென்றால் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் அனுப்புகிறார். ஆனால் கையில் இருந்த கோலால் தான் எல்லா காரியங்களையும் செய்து வருகிறார். இவ்விதமாக நம் ஆத்துமாவை பாவ குழியிலிருந்தும் அக்கிரமமாகிய சேற்றினின்றும் மேலும் புற ஜாதிகளுடைய கிரியைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க வேண்டுமானால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறபெற்ற இரத்தத்தால் மாத்திரமே, நாம் விடுதலையாவோம். அவ்விதம் விடுதலையான பிறகு ஒவ்வொரு நாளிலும் தேவனுடைய வார்த்தையாகிய அக்கினியானது நம்மை பரிசோதித்து சுத்திகரித்து கொண்டிருக்கும். அப்படி நாம் ஒவ்வொரு நாளிலும் சுத்திக்கரிப்போமானால்  பரிசுத்தமாவோம். அந்த பரிசுத்தத்தில் அசுத்தம் கலவாத படி நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

நம் ஆத்துமாவின் மீண்டெடுப்புக்கு திருஷ்டாந்தம் தான் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து  விடுதலையாகுதல் எப்படியெனில் கிறிஸ்து அவர்களோடே உண்டு என்பதை

1 கொரிந்தியர் 10 :1-4

இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

பிரியமானவர்களே இந்த காரியத்தை நாம் நன்றாக சிந்திக்கவேண்டும். இவ்விதம் வருவதற்கும், மோசேயினுடைய கையில் இருந்த கோல் தான் உபயோகப்பட்டது. அவர்கள் மேல் மேகம் இருந்தது. எல்லோரும் மேகத்துக்கு கீழாயிருந்தார்கள்.

எல்லாருடைய  வாழ்வும் சமுத்திரத்தின் வழியாய் தான் நடந்து வருகிறார்கள். கடந்த நாளில் நாம் தியானித்தது போல எல்லார் வாழ்விலும் சமுத்திரம் (அநீதி உண்டு) ஆனால் அவர்கள் மோசேக்குள்ளாக மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் ஞானஸ்தானம் பெற்றார்கள். என்று எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்றால் சமுத்திரத்தில் ஞானஸ்தானம் எடுப்பதற்கு அல்ல சமுத்திரத்தின் நடுவாக தான் கடந்து வந்தார்கள். ஆனால் அந்த சமுத்திரத்தின் ஒரு துளி தண்ணீர் போலும் காலில் நனையாமல் வெட்டாந்தரையாய் நடந்து வந்தார்கள். இது எதைக் குறிக்கிறது என்றால் நாம் ஞானஸ்நானம் பெறும் போது கிறிஸ்துவோடு எடுக்கிற உடன்படிக்கை.ஆனால் நம் தேவன் நமக்கு நிழலாயிருக்கிறார் (மறைவிடம்) ஆனால் நாம் அதுவரை செய்து வந்த ஒரு துன்மார்க்க கிரியைகளை நம்மளில் இல்லாதபடி நாம் அக்கரை கடக்க வேண்டும் என்பதை தேவன் நமக்கு அழகாக விளக்கிக் காட்டுகிறார்.

அப்படியிருக்குமானால் அலைகள் ( போராட்டம் )  வருவது குறைவாகயிருக்கும் மிகவும் ஜாக்கிரதையாக நாம் விசுவாச ஓட்டம் ஓட வேண்டும். இந்த விசுவாச ஓட்டத்திற்கு மிக முக்கியமான காரியம் என்னவென்றால்,

I தீமோத்தேயு: 2:15                                                                                               

அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

அன்பானவர்களே இதன் கருத்து என்னவென்றால் உலக சந்ததிகளை பெற்று எடுப்பதை குறிக்கவில்லை. நம் ஆத்துமாவின் இரட்சிப்பை காட்டுகிறது. என்னவென்றால் தேவனை விசுவாசிக்க வேண்டும். தேவன் ஒருவர் உண்டென்றும் அவர் கூறுகிற வார்த்தைகளை விசுவாசித்து நாம் கிரியையில் காண்பிக்க வேண்டும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. மேலும் அந்த விசுவாசத்தில் என்ன இருக்கிறது என்றால் அன்பு. என்னவென்றால் விசுவாசிக்கிற தேவ பிள்ளைகள் தேவனிடத்தில் அன்பாயிருப்பார்கள்.

தேவனிடத்தில் அன்பாயிருப்பவர்கள் அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளுவார்கள்

I தீமோத்தேயு: 1:5                                                                                               

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

 இந்த அன்பில் தான் பரிசுத்தம் விளங்குகிறது.

எபேசியர் 1:4-6

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

இவ்வித காரியங்கள் நமக்குள் தோன்ற வேண்டுமானால் தெளிந்த புத்தி உடையவர்களாக வேண்டும். அதனால் பிரியமானவர்களே இந்த நாட்களில் நாம் வாசித்து தியானிக்கிற வேத பகுதியை தெளிந்த புத்தியோடு வாசித்து தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவோமானால் தேவன் நம்மை பரிசுத்தபடுத்தி அவருக்கு முன்பாக நிற்கதக்க பாத்திரவன்களாக மாற்றுவார். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.       

-தொடர்ச்சி நாளை