தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 56:12,13
தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் மரணம் இல்லை.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை கிறிஸ்துவில் திடப்படுத்தல் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 68:9
தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
மேற்கூறபட்ட வசனங்களில் கிறிஸ்துவின் சுதந்திரம் என்றால் தேவசபை; அதனைக் குறித்து கிறிஸ்து சொல்வது
சங்கீதம் 68:10,12
உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
கர்த்தருடைய வசனம் அங்கிருந்து வெளிபட்டவுடனே சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள் (நம்மிலிருந்த செத்த ராஜாக்கள் கிரியை). வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைக் பொருளை பங்கிட்டாள் (நித்திய ஜீவன்).ஆதலால் கர்த்தர் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவரை குறித்து சொல்கிறார்
சங்கீதம் 68:13-18
நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.
தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.
தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
மேற்கூறிய பிரகாரம் கர்த்தர் நமக்குள் வாசமாயிருக்கிறார். மேலும் நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிறைந்து இருக்கும்போது அவருடைய இரதங்களாயிருக்கிறோம். அப்போது நாம் எப்போதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமானால்; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவர் தான். அல்லாமலும் நமக்கு இரட்சிப்பை அருளுகிற தேவனாயிருக்கிறார். ஆதலால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. ஆதலால் பிரியமானவர்களே, நம்மிலிருக்கிற செத்த இராட்சத ராஜாக்களின் கிரியை அழித்து; எப்போதும் தேவனுக்கு முன்பாக உண்மையும், உத்தமத்தோடே வாழ்வோமானால் மரணத்திற்கு (ஆத்துமா) நீங்கலாக வாழ்வோம். இப்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.