தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 35:3
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை கிறிஸ்துவில் திடப்படுத்தல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கர்த்தருடைய இரட்சண்யம் விளங்கும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 68:1-3
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
மேற்கூறபட்ட வசனங்கள் இராக தலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதமாவது தேவன் நம் நடுவில் (உள்ளத்தில்) எழுந்தருளும் போது சத்துருக்கள் சிதறுண்டு, தேவனை பகைக்கிறவர்கள் நம் உள்ளத்திலிருந்து ஓடிப்போவார்கள். அவர்களை தேவன் புகை பறக்கடிக்கிறது போல் பறக்கடிப்பார். பின்னும் கர்த்தர் துன்மார்க்கனை நம் உள்ளத்திலிருந்து அழிக்கிற விதம் கூறப்படுகிறது. அப்போது நீதிமான்கள் கர்த்தருக்குள் மகிழந்து பாடுவார்கள். கர்த்தராகிய கிறிஸ்து சொல்வது,
சங்கீதம் 68:4-6
தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகள் பிரகாரம் கர்த்தர் நமக்கு செய்து; நமக்கு முன்னே சென்று நம்முடைய அவாந்தர வெளியாகிய ஒன்றுமில்லாமையில் அவர் நடந்து வருகையில் நம்முடைய உள்ளமாகிய பூமி அதிர்ந்து, தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக வானம் வசனத்தை பொழிகிறது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நம்முடைய பாரம்பரியம் அசைகிறது; அப்போது சம்பூரண மழையை தேவன் பெய்ய பண்ணுகிறார்; அவ்விதம் இளைத்து போன சுதந்தரத்தை கர்த்தர் நமக்குள் திடபடுத்துகிறார். இவ்விதம் சதந்தரமாக கிறிஸ்து நம்மில் திடப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.