தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 43:4
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மிடம் அக்கிரம சிந்தை இல்லாவிட்டால் அவர் நம்மை கைவிடமாட்டார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனை கெம்பீர சத்தத்தோடே மகிமைப்படுத்த வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 66:1-2
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
மேற்கூறபட்ட வசனங்களில் இராகவதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் சங்கீதமாவது, நாம் எல்லாரும் தேவனுக்கு முன்பாக அவரை கெம்பீரமாய் பாடி, அவர் நாமத்தை கீர்த்தனம் பண்ணி, அவர் துதியின் மகிமையைக் கொண்டாட வேண்டும். நாம் தேவனை நோக்கி எப்படி பாடி துதி செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து
சங்கீதம் 66:3-12
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)
ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
மேற்கூறபட்ட வார்த்தைகளின் கருத்துக்கள் முக்கியமானவைகள் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அதென்னவென்றால் நம் உள்ளத்திலுள்ள துன்மார்க்கமாகிய பொல்லாத இச்சையான பழக்க வழக்கங்களை தேவன் நம்மை விட்டு மாற்றி அவர் தம்முடைய வல்லமையினால் நம்மை அரசாளுவார். அவருடைய கண்கள் நம்மிலிருக்கிற ஜாதிகள் மேல் நோக்கமாயிருக்கிறது. துரோகிகளாகிய நாம் நம்மை உயர்த்தாதிருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தேவனை ஸ்தோத்தரித்து அவரை துதிக்கும் சத்தத்தை கேட்கபண்ண வேண்டும். அப்போது நம்முடைய கால்கள் தள்ளாடவொட்டாமல் , நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். ஆனால் நாம் தேவனுக்கு துரோகம் செய்தால் கர்த்தர் நம்மை சோதித்து வெள்ளியை புடமிடுகிறது போல் புடமிட்டு, நம்மை வலையில் அகப்படுத்தி இடுப்புகளின் மேல் வருத்தமான பாரத்தை ஏற்றி, மனுஷரை தங்கள் தலையில் ஏறிப்போகபண்ணும் போது (மனுஷர்கள் நமக்கு விரோதமாக எழும்பும் போது ) தீயையும் தண்ணீரையும் கடந்து வருகிறோம்; அப்போது நாம் தேவனை கூப்பிட்டால் அவர் நம்மை செழிப்பான இடமாகிய தேவ சபையில் நம்மை கொண்டு வந்து விடுகிறார். அல்லாமலும் கர்த்தரிடத்தில் எடுக்கிற பொருத்தனையோவெனில்
சங்கீதம் 66:13-15.
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
மேற்கூறபட்ட பொருத்தனைகளை செலுத்தவோமானால் தேவன் நம்மை கைவிடமாட்டார்; நம்முடைய ஜெபத்தை கேட்பார். ஆனால் நம்முடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருப்போமானால் கர்த்தர் நமக்கு செவிக்கொடார். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்தை தள்ளாமலும், தமது கிருபையை நம்மை விட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு எப்போதும் ஸ்தோத்திரம் செலுத்துகிறவர்களாக நம்மை கர்த்தரின் சமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.