தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 32:11 

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் கிறிஸ்துவினால் செம்மைபடுத்தபட வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா தேவனுடைய நிணமும் கொழுப்பும் உண்ண வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 64:1-8 

தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.

அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.

அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.

அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.

ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் சங்கீதம்.  இந்த கர்த்தரின் வார்த்தைகள் என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக நம்மிடத்திலிருந்து பிதாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணி நம்மிலிருக்கிற அசுத்த ஆவிகளை துரத்தியடிக்கும் போது, நாம் தேவனுடைய செயலை அறிவித்து, அவருடைய கிரியை உணர்ந்து கொள்கிறவர்களாவோம்.  அப்போது நம்முடைய ஆத்துமா சத்துருவின் கட்டிலிருந்து விடுதலையாகி கர்த்தருக்குள் மகிழ்ந்து அவரை நம்புவான்.  நம்முடைய இருதயம் இவ்விதம் தேவனிடத்தில்  நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து ஏறெடுக்கிற  விண்ணப்பத்தால் செம்மையாகும்போது நாம் தேவனைக் குறித்து மேன்மைபாராட்டுவோம்.  ஆதலால் பிரியமானவர்களே, நம்முடைய உள்ளம் கிறிஸ்துவினால் தூய்மையாகும் போது தேவனை மேன்மைபாராட்டுவோம்.  இவ்விதம் தேவனை மட்டும் மேன்மை பாராட்டும்படியாக நம்முடைய இருதயத்தை செம்மைப் படுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.