தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 4:6

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு வரும் கிருபை தேவனுடையது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்,  மணவாட்டி சபையாகிய நாம் தினந்தோறும் தேவனை கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 62:1-2

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.

மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகள் நம்முடைய ஆத்துமா எப்போதும் தேவனையே நோக்கி அமர்ந்திருக்க வேண்டும்.  அப்படியிருந்தால் அவரால் நமக்கு இரட்சிப்பு வரும்.  அவ்விதம் இரட்சிக்கபட்டிருப்போமானால் அவரே நமக்கு கன்மலையும், இரட்சிப்பும்,  உயர்ந்த அடைக்கலமுமானவர்; நாம் ஒரு போதும் அதிகமாய் அசைக்கபடுவதில்லை.  ஆனால் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்கும் உள்ளங்களைக் குறித்து அவர் சொல்வது 

சங்கீதம் 62:3,4 

நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.

அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.)

மேற்கூறிய பிரகாரம் நாம் ஒருபோதும் சிந்திக்காமல், நம்முடைய ஆத்துமா தேவனை நோக்கியே அமர்ந்திருக்க வேண்டும்; அப்போது நாம் நம்பினது அவராலே வரும்.  மேலும் நம்முடைய இரட்சிப்பும், நம்முடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது.  கன்மலையும், அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.  ஆதலால் நாம் எந்நேரத்திலும் அவரை நம்பும்படியும், அவர் சமூகத்தில் நம்முடைய இருதயத்தை ஊற்றிவிடுமோனால்; கர்த்தர் எப்போதும் நமக்கு அடைக்கலமாயிருப்பார்.  கீழ்மக்கள் மாயையும், (உலகம்) மேன்மக்கள் (பரலோகம்) மெய்யுமாமே, இந்த காரியங்கள் தராசிலே வைக்கபட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.  கொடுமையை (உலகம்) நம்பாதிருங்கள், கொள்ளையினால் (சம்பாத்தியம்)பெருமைபாராட்டாதிருங்கள்; அதன் மூலம் வருகிற ஐசுவரியம் விருத்தியானால் நம்முடைய இருதயத்தை அதன் மேல் நம்பிக்கை வைக்காமல் இருக்க வேண்டும்.  தேவன் ஒருதரம் விளம்பினால், இரண்டு தரம் கேட்டிருப்போமானால் அவர் வல்லமை நம்மேல் அதிகமாய் விளங்கும். கிருபை தேவனுடையது, அந்த கிருபை நம்மேல் வருவது அவனவன் செய்கைக்கு தக்கதாக அவனவனுக்கு கிருபையாகிய பலனளிப்பார் என்பதே.  ஆதலால் தேவனுடைய கிருபை நம்மேல் அதிகமாக விளங்கும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.