தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 51:14

தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்  மணவாட்டி சபையாகிய  நம்முடைய பலிகள் தேவனுக்கு ஸ்தோத்திரபலி செலுத்தவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக  நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 50:16-23 

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.

நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

வசனங்களில் கர்த்தர் துன்மார்க்கனை நோக்கி சொல்வதும்; துன்மார்க்கன் என்றால் உலக அசுத்தங்களாகிய இச்சைகளில் நடந்து தேவனையும் ஆராதிப்பார்கள்.  ஆதலால் 

சங்கீதம் 50:16-20 

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.

நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் (வஞ்சனையை) பிணைக்கிறது.

நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

மேற்கூறபட்ட வசனங்களில் நாம் தியானிக்கும் போது உலக அசுத்தங்களில் சிக்கினவர்கள் ஒரு போதும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை போதிக்கக் கூடாது என்றும், அப்படிபட்டவர்கள் விபச்சாரத்தில்  பங்குள்ளவர்களாக திருடனை காணும்போது ஒருமித்து போகிறார்கள்  என்றும்; தேவனுடைய வார்த்தைகளை பின்னாக வீசி எறிந்து, சகோதரருக்கு விரோதமாய் பேசி தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.  ஆதலால் தேவன் சொல்வது 

சங்கீதம் 50:21-23  

இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

மேற்கூறபட்ட  காரியங்கள் இப்படிபட்டவர்களுக்கு விரோதமாக கர்த்தர் செய்வதால் நாம் தேவனுக்கு எப்போதும்  ஸ்தோத்திரபலி செலுத்தி அவரை மகிமைபடுத்த வேண்டும். அதுவுமட்டுமல்லாமல் நம்முடைய வழியை செவ்வைப்படுத்தி தேவனுடைய இரட்சிப்பை நாம் வெளிப்படுத்துவேன் என்று கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.