தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1பேதுரு 3:14 

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நீதிமானாகிய கிறிஸ்துவின் சிந்தையோடு நடந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய நடத்தைகள் கர்த்தரால் உறுதிப்படுத்தபட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 37:28-32 

கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

மேற்கூறபட்ட வசனங்களின் விளக்கம் என்னவென்றால் கர்த்தர் நியாயத்தை நம்மில் விரும்புகிறார். நாம் அவர் பாதையில் நடந்து பரிசுத்ததை தரித்திருப்போமானால்; பரிசுத்தவான்களை அவர் கைவிடுகிறதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது; அவர்கள் என்றென்றைக்கும் காக்கப்படுவார்கள்.   ஆனால் உலக இன்பங்களில் சிக்கி துன்மார்க்கமாய் நடக்கிறவர்களின் சந்ததியோ அறுப்புண்டு போகும்.  மேலும் நீதிமான்கள் பூமியை சுதந்தரித்து கொண்டு என்றென்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.  அல்லாமலும் அவனுடைய வாய் ஞானத்தை உரைத்து, நியாயத்தைப் பேசும்.  மேலும் நீதிமானைக் குறித்து தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கும்; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.  ஆனால் துன்மார்க்கன் நீதிமான் மேல் கண் வைத்து அவனை கொல்ல வகைதேடுகிறான்.  

பிரியமானவர்களே, நம் உள்ளமானது ஒரு போதும் துன்மார்க்கமாகிய உலக இன்பங்களில் சிக்கிக்கொள்ளாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னவென்றால் அந்த ஆசை இன்பங்கள் நாம் நீதியில் வளரவிடாதபடி தடைபண்ணி, நீதியை நடப்பிக்கிற நம்முடையை ஆத்துமாவை உலக இன்பங்கள் நெருக்கி அதனை கொல்ல வகைதேடும்.  ஆதலால் நாம் பரிசுத்தமாக வாழ்ந்து நீதியை நடப்பித்து, நியாயத்தை பேசி நம்முடைய ஆத்துமா துன்மார்க்க கிரியைகளால் கொல்லபடாதபடி ஜாக்கிரதையாக இருந்து நம்மை கிறிஸ்துவுக்குள் காத்துக் கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.