தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 42:7
கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய நடத்தைகள் கர்த்தரால் உறுதிப்படுத்தபட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய சுதந்தரம் கர்த்தருக்குள் என்றென்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 37:23-27
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
மேற்கூறபட்ட வசனங்களில் நாம் நல்லவர்களாக நடப்போமானால் நம்முடைய நடைகளை கர்த்தர் உறுதிப்படுத்துகிறார். நல்லவர்களின் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். அவர்கள் ஆத்மீகத்தில் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. ஏனென்றால் கர்த்தரின் கரமாகிய தேவனுடைய வார்த்தை அவர்களை தாங்கும். மேலும் கர்த்தர் தாவீதைக் கொண்டு திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் நான் இளைஞனாயிருந்தேன், முதிர் வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடபட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. அவன் நித்தம் இரங்கி கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். மேலும் கர்த்தர் சொல்வது தீமையை விட்டு விலகி நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய் என்கிறார். இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், தீமை செய்யக்கூடாது. கர்த்தரின் வசனமாகிய அப்பம் மற்றவர்களுக்கு பரிமாற வேண்டும். இப்படியாக உள்ளவர்களின் நடத்தைகள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். மற்றும் அப்படிபட்டவர்கள் கர்த்தருக்குள் எப்போதும் நடக்கும்படியாக அவர் நடைகளை உறுதிப்படுத்துகிறார். மேலும் கர்த்தருக்குள் நம்முடைய நடைகள் உறுதிப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.