தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 52:13

இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நம்மில் மகத்தான இரட்சிப்பை கிறிஸ்து  பெற்றுக்கொள்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை சத்தியத்தின்படி சேவிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 18:45-50 

அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.

அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.

அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.

இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

மேற்கூறபட்ட வசனங்களில் கர்த்தராகிய தேவன்  எல்லா சத்துருவின் செயல்களை எல்லாம் கிறிஸ்துவின் கீழ் அடங்கபண்ணி அந்நிய கிரியைகள்  முனை விழுந்து போய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய் புறப்படுவார்களாக என்கிறார்.  கர்த்தர் ஜீவனுள்ளவர், கன்மலையானவர் துதிக்கப்படுவாராக.  என் தேவன் எல்லாவற்றிலும் உயர்ந்திருக்கிறவராக  விளங்குகிறார் என்பதனை கூறுகிறார்.  மேலும் நம்முடைய தேவன் கிறிஸ்துவுக்காக ஜாதிகளின் மேல் ஆளுகை செய்து பழிக்கு பழி வாங்கி நம்மை அவருக்கு கீழ்படுத்துகிற தேவனாயிருக்கிறார்.  அவர் சத்துருவின் கையிலிருந்து விலக்கி விடுவிக்கிறவரும், விரோதமாய் எழும்புகிறவர்கள் மேல் நம்முடைய கிறிஸ்துவை உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு நம்மை தப்புவிக்கிறார்.  இதனிமித்தம் ஜாதிகளுக்குள்ளே தேவனை துதித்து, உமக்கு சங்கீதம் பாடுவேன் என்கிறார்.  மேலும் கிறிஸ்துவின் சங்கீதம்; தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும், அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.  ஆதலால் இந்த சங்கீதம் சகல ஜாதிகளின் கிரியைகளிலிருந்து நம்மை கிறிஸ்துவினால் இரட்சிக்கிற தேவனாக செயல்படுகிறார்.  இப்படியாக இதனை வாசிக்கிற எல்லாரும் கிறிஸ்துவுக்குள் விடுதலையாகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.