தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 50:9,10

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தராகிய கிறிஸ்துவை சத்தியத்தின்படி சேவிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் புடமிட்டு பரிசுத்தமாக்கபட்டவர்களாக நற்பலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை தேவன் எப்படி நம்மில் சத்துருக்களோடு யுத்தம் செய்ய பழக்குவிக்கிறார் என்பதன் கருத்துக்கள் என்னவெனில் வெண்கல வில்லும் தன் கைகளால் வளையும்படி கிறிஸ்துவை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார். கர்த்தராகிய கிறிஸ்து சொல்வது இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர்; உம்முடைய வலது கரம் என்னை தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னை பெரியவனாக்கும்.  இந்த வார்த்தைகளாவது கிறிஸ்துவே எல்லாரிலும் பெரியவராக விளங்குகிறார்.  அவர் சொல்வது என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். பின்னும் நாம் கிறிஸ்துவில் சொல்வது 

சங்கீதம் 18:37-43 

என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.

அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.

யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.

நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.

நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்

மேற்கூறபட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நீதியுள்ளவரும், இரட்சிக்கிறவரும்,தாழ்மையுள்ளவருமாயிருந்து, நம்முடைய சத்துருக்களை கிறிஸ்துவின் கீழ் அடங்கபண்ணினவருமாயிருக்கிறார். ஆதலால் பிரியமானவர்களே நாம் ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சேவிக்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.