தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 42:13
கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து இரட்சிக்க நமக்காக தேவன் யுத்தம் பண்ணுகிறவர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஊழியக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 35:1-5
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்.
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.
அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
மேற்கூறபட்ட வசனங்களில் கர்த்தராகிய கிறிஸ்து தேவனிடத்தில் கூறுவது என்னவென்றால் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம் பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணும். நமக்காக தேவன் யுத்தம் பண்ணுவது தேவ வசனமாகிய கேடகத்தையும், தேவனுடைய ஆவியாகிய பரிசையும் பிடித்து கொண்டு நமக்காக யுத்தம் செய்து; நம்மை துன்பப்படுத்துவது கிறிஸ்துவை துன்பப்படுத்துகிறபடியால் தேவன் அவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியாகிய கிருபையால் சத்துருக்களை மறித்து, தேவனே என் இரட்சிப்பு என்று கிறிஸ்து சொல்கிறார். பின்பு அவர் பிராணனை சத்துருக்கள் நமக்குள் வாங்க தேடுகிறபடியால் அவர்கள் வெட்கபட்டு கலங்குவார்களாக என்றும்; எனக்கு தீங்கு செய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்கள் என்றும் கிறிஸ்து சொல்லிக்கொண்டு அவர்கள் காற்று முகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக என்கிறார்; கர்த்தருடைய தூதன் அவர்களை துரத்துவார். பிரியமானவர்களே, நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்களை தேவன் யுத்தம் செய்து நிர்மூலமாக்கும்படியாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.