தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 14:21 

உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் கர்த்தருக்குள் ஸ்திரபடுத்தப்பட  வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்காக கிறிஸ்து எல்லாவிதத்திலும் பாடுபடுகிறவராயிருக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 31:15 

என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.

மேற்கூறிய வசனங்களில் மேலும் கிறிஸ்து தேவனிடத்தில் சொல்வது என் காலங்கள் உமது கையில் இருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னை துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னை விலக்கி தப்புவியும்.  அல்லாமலும் அவர் சொல்வது 

சங்கீதம் 31:16 

நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

மேற்கூறிய வசனங்கள் தேவன் தம்முடைய முகத்தை ஊழியக்காரர் மேல் பிரகாசிக்கப்பண்ணி, அவர் கிருபையினால்  நம்மில் கிறிஸ்து இரட்சிக்கப்படுகிறார் என்பதே.  பின்பு அவர் சொல்வது 

சங்கீதம் 31:17-22 

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.

நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.

உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

மேற்கூறபட்ட வசனங்களில் துன்மார்க்கர்கள் (உலக ஆசை, இச்சை, மோகம் ) இவைகளில் வாழ்பவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாயிருப்பார்கள்.  மேலும் நீதிமான்களுக்கு விரோதமாய் பெருமையோடும், இகழ்ச்சியோடும்  கடினமாய் பேசுகிற  பொய் உதடுகள் கட்டப்பட்டு போவதாக என்கிறார்.  மேலும் தேவன் மனுஷர்களை எவ்விதத்தில் காப்பாற்றி, போஷித்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி காத்து இரட்சித்து, அவர்களை கூடாரத்தின் (சரீரத்திற்குள்) மறைவுக்குள் ஒளித்து வைத்து காப்பாற்றி, அரணான நகரத்தில் நமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறார்.  மேலும் நம்முடைய கஷ்டத்தில் மனக்கலக்கத்திலே நான் வெட்டுண்டேன் என்று நாம் சொன்னாலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது அவர் விண்ணப்பங்களின் சத்தத்தை கேட்கிறார்.  பின்பு கிறிஸ்து நம்மை நோக்கி சொல்வது பரிசுத்தவான்களே, நீங்கள் எல்லாரும் அவரிடத்தில் அன்பு கூருங்கள் என்கிறார்; உண்மையானவனை கர்த்தர் தற்காத்து இடும்பு செய்கிறவனுக்கு பூரணமாய் பலனளிப்பார். ஆதலால் பிரியமானவர்களே,  நாம் எல்லாரும் கர்த்தருக்கு காத்திருந்து திடமனதாயிருக்க வேண்டும்.  அவர் நம்முடைய இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.  இவ்விதமாக நம்முடைய இருதயம் கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்தப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.