தேவனுக்கே மகிமையுண்டாவதாக


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்காக கிறிஸ்து எல்லாவிதத்திலும் பாடுபடுகிறவராயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவில் புலம்பலை ஆனந்த களிப்புள்ளதாக மாற்றுகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்  

சங்கீதம் 31:1-14 

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.

அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.

உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.

சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.

என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.

செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப் போலானேன்.

அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.

நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.

மேற்கூறபட்ட சங்கீதம் இராகவதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் சங்கீதம்.  இச் சங்கீதமாவது நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்து தேவனிடத்தில் தன்னுடைய வியாகுலத்தில் தன்னை தேவசமூகத்தில் நமக்காக தன்னை தாழ்த்தி பாவ அறிக்கை செய்து, வீண்மாயைகளை பற்றிக்கொள்ளுகிறவர்களை அவர் வெறுக்கிறார் என்றும், எல்லா இக்கட்டு துன்பத்தில் எல்லாராலும் மறக்கப்பட்டாலும் கர்த்தர் மேல் மட்டும் நம்பிக்கையாயிருந்து, கர்த்தரின் கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன் என்றும், அவருடைய உபத்திரவத்தையும், ஆத்தும வியாகுலத்தையும் தேவன் பார்த்து அறிந்திருக்கிறார் என்றும் அறிக்கைபண்ணுகிறார்.  ஆதலால் தேவன் சத்துருவின் கையில் ஒப்புக்கொடாதபடி பாதுகாத்து அவர் பாதங்களை விசாலத்திலே வைத்தார்.  மேலும் நிந்தைகள், பரிகாசமுமாகி செத்தவனை போல எல்லாராலும் மறக்கபட்டு உடைந்த பாத்திரத்தை போலானேன் என்றும் கூறுகிறார்.  இவ்விதமாக மேலே கூறபட்டுள்ள அத்தனை கூட்டமும் கிறிஸ்துவை சூழ்ந்துக் கொண்ட போதிலும் அவர் கர்த்தரின் பேரில் மட்டும் நம்பிக்கைக் கொண்டு அவரே என் தேவன் நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுகிறார்.  அதனை போல் பிரியமானவர்களே, மேற்கூறபட்ட அத்தனை கஷ்டங்களும் கிறிஸ்து நமக்காக பாடுபட்டு கர்த்தர் பேரில் மட்டும் நம்பிக்கையுள்ளவராயிருக்கிறது போல நாம் அவர் பேரில் மட்டும் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கும் படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.