தேவனுக்கே மகிமையுண்டாவதாக

தீத்து 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் கர்த்தர்  புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றுகிறார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவ வசனத்தால் நிறைந்தவர்களாக இருந்து கர்த்தரின் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 30:1 

கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது (கிரகபிரதீஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம். இந்த சங்கீதமாவது நமக்கு எதிராக போராடின சத்துருக்கள் நம்மை மேற்கொள்ளாதபடியும் அவைகள் நம்மை பார்த்து மகிழவொட்டாமல், நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து, நம்மை கை தூக்கி எடுத்தபடியினால், கிறிஸ்து நம்மில் இருந்து தேவனை போற்றி புகழ்ந்து பாடுகிற பாட்டாவது

சங்கீதம் 30:2,3 

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

மேலும் நமக்கு கிறிஸ்து உபதேசிக்கிறதாவது 

சங்கீதம் 30:4-6 

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன்.

இந்த  வார்த்தைகள் கிறிஸ்து உபதேசித்து முடிந்த பின்பு கர்த்தரிடம்  விண்ணப்பிக்கிற சத்தமாவது 

சங்கீதம் 30:7-12 

கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

மேற்கூறபட்ட வசனங்கள் தியானிக்கும்போது, பிரியமானவர்களே கர்த்தர் நமக்கு எல்லாவிதத்திலும் சகாயராயிருந்து கிறிஸ்துவின் மீண்டெடுப்பால் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறப்பண்ணி; கிறிஸ்துவின் மகிமை அமர்ந்திராமல் கர்த்தரை கீர்த்தனம் பண்ணும்படியாக அவர் நம்முடைய துன்பத்தை அகற்றி. மகிழ்ச்சியென்னும் கட்டினால்  இடைக்கட்டுகிறார்.  இப்படி நம்மை மகிழ்ச்சியாக்குகிற கர்த்தரை என்றென்றைக்கும் துதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.