தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 114:2 

யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவ வசனத்தால் நிறைந்தவர்களாக இருந்து கர்த்தரின் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவுக்கு கர்த்தரே பெலனும், அரணும், கேடகமுமாவார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

சங்கீதம் 29:1-11

பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.

கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

மேற்கூறபட்ட வசனங்களில் கூறபட்டவைகள் என்னவென்றால் பலவான்களின் புத்திரரே என்று சொல்லபட்டவைகள் ( இரட்சிக்கபடுவதற்கு முன்பு) எல்லாரும் கர்த்தருக்கே வல்லமையும், மகிமையும் செலுத்த  வேண்டும். கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச்  செலுத்த வேண்டும்; மேலும் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுகொள்ள வேண்டும்.  அவ்விதம் நாம் கர்த்தரை தொழுதுக்கொள்ளும் போது கர்த்தரின் சத்தமாகிய வசனம் ஜனங்களின் மேல் தொனிக்கும். அந்த கர்த்தரின் வசனமாக தொனிக்கிற சத்தம் நம்முடைய ஆத்துமாவை வல்லமைப்படுத்துகிறது; மேலும் அவர் சத்தம் மகத்துவமானது.  இந்த சத்தமாகிய கர்த்தரின் வசனம் நம்முடைய உலகமாகிய உயர்வான எண்ணங்களை முறித்து, பெருமையை நிறைந்த நம் உள்ளத்தில் தாழ்மை உண்டாக்குகிறது.  அப்படிபட்ட ஆத்துமா கன்றுகுட்டிகளை போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டா மிருக குட்டிகளை போலவும் துள்ள பண்ணுகிறார். இதன் விளக்கம் என்னவென்றால் எந்த புறஜாதிகளுக்கும் கர்த்தரின் வசனம் உள்ளத்தை தொடும் போது மேலே கூறபட்டுள்ளபடி ஆத்துமாவில் ஒரு எழுப்புதல் உண்டாகும்.  அது மட்டுமல்ல கர்த்தரின் வசனமாகிய சத்தம் அக்கினி ஜுவாலைகளை பிளக்கும்.  கர்த்தரின் சத்தம் காதேஸ் வனாந்தரத்தை அதிர பண்ணும் (ஒன்றுமில்லாமல் வெறிச்சோடி இருக்கிற இடமாகிய உள்ளம் அதிர்ந்து பிளவுகள் உண்டாகி அங்கிருந்து தண்ணீராகிய வசனம் புறப்பட்டு வரும்.  அல்லாமலும் கர்த்தரின் சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கி கர்த்தரின் ஆலயமாக நம் உள்ளமானது மாற்றப்படுகிறது.  அப்போது அவர்கள் கர்த்தரின் மகிமையை பிரஸ்தாபிக்கிறார்கள்.  கர்த்தர் ஜலபிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறார். என்னவென்றால் கர்த்தர் என்றால் முழுமையும் ஜலத்தில் (வசனத்தால்) நிறைந்தவர்.  அவர் நம் நடுவில் ராஜாவாக வீற்றிருக்கிறார்.  கர்த்தர் நமக்கு பெலன் கொடுப்பார்.  இவ்விதமாக கர்த்தரின் வசனம் நமக்கு  சமாதானம் அருளி ஆசீர்வதிப்பார்.  பிரியமானவர்களே,  மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தரின் வசனம் தான் எவ்விதத்தாரையும் உலகத்திலிருந்து இரட்சித்து ஆசீர்வதிக்கிறது.  இவ்விதமான ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.