தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 27:1 

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவுக்கு கர்த்தரே பெலனும், அரணும், கேடகமுமாவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் விண்ணப்பங்களோடு கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 28:1-9 

என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.

அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.

அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.

தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

மேற்கூறபட்ட வசனங்களில் கிறிஸ்து கன்மலையாக நம் உள்ளத்தில் உயர்த்தபட்டபின்பு; இயேசு கிறிஸ்துவின் விண்ணப்பமாவது கூறப்படுகிறது. மேலும் நாம் பாட்டினால் அவரை உயர்த்தும் துதியும் நம் நாவிலிருந்து எழும்ப வேண்டும். கர்த்தர் நம்முடைய பெலனும், தாம் அபிஷேகம்பண்ணின கிறிஸ்துவுக்கு அரணான அடைக்கலமானவர்.  அவ்விதமாக கிறிஸ்துவின் விண்ணப்பமாவது தேவரீர் தம்முடைய ஜனத்தை இரட்சித்து, அவர் சுதந்தரமாகிய நம்மை ஆசீர்வதித்து, நம்மை போஷித்து அவர் நம்மை என்றென்றைக்கும்  உயர்த்தியருளும் என்கிறார்.இப்படியாக நம்மை தேவன் இரட்சித்து, நாம் அவர் சுதந்தரமாக ஆசீர்வதிக்கப்பட்டு, அவரால் நாம் அனுதினம் போஷிக்கபட்டு அவர் சமூகத்தில் என்றன்றைக்கும் ஆசீர்வாதமாகயிருக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.