தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 43:5

பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய நடத்தைகள் செம்மையானதாக இருக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தராகிய தேவன் கிறிஸ்து மூலம் எல்லாவித இக்கட்டுக்கும் நீங்கலாக்கி இரட்சிக்கிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 26:1-12 

கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்.

வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.

கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.

என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.

நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.

என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தராகிய தேவன் நம்முடைய உத்தம குணத்தைப் பார்த்து நம்மை நியாயம் விசாரித்து; அவர் பாதைகளில் நம்மை நடக்க கற்று தந்து;  பொல்லாதவர்களின் கூட்டத்தை எல்லாம் நாம் பகைக்கவும், துன்மார்க்கர்கள் கூட்டத்தில் உட்காராமலும், வஞ்சகரிடத்தில்  சேராமலும் இருந்து நாம் துதியின் சத்தத்தை  நாம் தொனிக்கப்பண்ணி, தேவனுடைய அதிசயங்களையெல்லாம் விவரிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.  இதற்காக நாம் நம்முடைய பாவங்களை கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி, கர்த்தருடைய பீடமாகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், அவர் மகிமை தங்கிய  ஸ்தானத்தையும்  வாஞ்சிக்கிறவர்களாக  இருக்க வேண்டும்.  அப்போது  நம்மை பாவிகளோடும், நம்முடைய ஜீவனை இரத்தபிரியரோடு நம்மை வாரிககொள்ளாதபடி பாதுகாப்பார். இரத்தப்பிரியர் என்றால் அவர்கள் செயல்பாடுகளில் தீவினை இருக்கும்; அவர்கள் மற்றவர்களை தவறான உபதேசத்தில் நடத்தி செல்வதினால் அவர்கள் ஆத்துமா அழிவுக்கு நேராய் போய்விடும்.  மற்றும் பரிதானம் அவர்கள் கைகளில் உண்டாயிருக்கும்.  என்னவென்றால் உலகத்தாரை போல பணத்திற்காகவும், பொருளுக்காகவும் தேவன் கொடுத்த கிருபையை பிரயோஜனப்படுத்துவார்கள்.  ஆனால் பிரியமானவர்களே, நாமோ உத்தமத்திலே நடப்போம்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும் என்றும்; நம்முடைய நடத்தைகள் செம்மையான கர்த்தருக்கு சித்தமான பிரகாரம் நடந்து சபைகளிலே கர்த்தரை சதாகாலங்களிலும் ஸ்தோத்தரித்து, துதித்து மகிமைபடுத்துவோம் என்றும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.