தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 24:1 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா
மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து மகிமையின் ராஜாவாக வெளிப்படுகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரின் வீட்டிலே நிலைத்திருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 24:1-3
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது பூமியும் அதின் நிறைவும் குடிகளும் கர்த்தருடையது. கர்த்தரே அதை கடல்களுக்கு மேலாக அஸதிபாரப்படுத்தி, நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். இதனைக்குறித்து கர்த்தர் சொல்வது மனிதர்கள் யாவரும் பூமியின் குடிகளாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் உலகமாகிய கிரியைகள் இருக்கிறதினால், நம்மை குறித்து கடல்களுக்கு மேலாக அஸ்திபாரபடுத்தி நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கும் போது யார் கர்த்தரின் பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான் என்கிற கேள்விக்கு
சங்கீதம் 24:4-6
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
மேற்கூறபட்ட வசனங்களில் எழுதபட்டவைகள் போல் நடக்கிறவர்கள் மட்டுமே. இவர்கள் யாக்கோபு என்னும் சந்ததி. ஆதலால் கர்த்தர் சொல்வது
சங்கீதம் 24:7-10
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)
மேற்கூறிய வசனங்களில் வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். பிரியமானவர்ளே நம்முடைய உள்ளத்தில் மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறவரும்,அவர் வல்லமையும் பராக்கிரமும் உள்ள கர்த்தர். அவரே நம்முடைய உள்ளத்தின் சத்துருக்களோடு யுத்தம் செய்கிறவரும்; சேனைகளின் தேவனாகசெயல்படுகிறவரும் கர்த்தராகிய கிறிஸ்து ஒருவரே; அவரே மகிமையின் ராஜா. ஆதலால்
பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளை ஆத்துமாவில் ஏற்றுக்கொள்ளும் போது அவர் மகிமையில் நாம் வளருகிறவர்களாக இருந்தால் நம்மில் கிறிஸ்து மகிமையின் ராஜாவாகவும்,வல்லமையும்,பராக்கிரமுமுள்ள கர்த்தராக வெளிப்படுவார். இவ்விதமாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.