தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 51:15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து எப்போதும் கர்த்தரை துதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் பொல்லாத கிரியையை கர்த்தர் ஒழிய பண்ணுகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 22:1-22
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.
பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
மேற்கூறபட்ட வசனங்களில் எழுதபட்டவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; பிதாவாகிய தேவனிடத்தில் சத்துருக்களால் நெருக்கப்படும் போது விண்ணப்பிக்கிற விண்ணப்பம் கூறப்பட்டிருக்கிறது. இவைகள் அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி இராகவ தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் இந்த சங்கீதமாவது அவர் தன்னை தரைமட்டுமாக தாழ்த்தி விண்ணப்பம் பண்ணுவதும்; தேவன் அவரை பிறப்பு முதல் பாதுகாத்து வந்ததும்; இப்போதும் தேவன் தன்னை விட்டு தூரம் போய்விடாதபடி பாதுகாத்துக்கொள்வதும்; அநேக சத்துருக்கள் சூழ நின்று; பொல்லாதவர்களின் கூட்டம் அவரை வளைந்து கொண்டதையும்; அவர் கால்களை உருவ குத்துகிறார்கள் என்பதனையும் கூறுகிறார். மேலும் தன்னில் இருக்கிற கஷ்டங்களால் என் எலும்புகளை எல்லாம் எண்ணலாம் என்றும்; சத்துருக்கள் தன்னை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். அல்லாமலும் அவர் வஸ்திரங்களை தங்களுக்குள்ளே பங்கிட்டு உடையின் பேரில் சீட்டுபோடுகிறார்கள். மேலும் சீக்கிரத்தில் எனக்கு சகாயம்பண்ண தீவிரியும். அல்லாமலும் கிறிஸ்துவின் விண்ணப்பமாவது என் ஆத்துமாவை பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை (ஆத்துமாவை) நாய்களின் துஷ்டதனத்திற்கும் தப்புவியும். என்னை சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும் (துர் உபதேசம்). பின்பு அவர் சொல்வது நான் காண்டா மிருகத்தின் கொம்பில் இருக்கும் போது இரட்சிக்கப்பட்டேன் என்று யூதா ஜனங்களை குறித்து கிறிஸ்து கூறுகிறார். இப்படியாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் தேவனால் சத்துருக்களின் நடுவிவிலிருந்து இரட்சிக்கப்பட்டு நம் ஆத்துமா கிறிஸ்துவினால் ஜீவன் பெறும் போது அவருடைய விண்ணப்பமாவது உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மை துதிப்பேன் என்று சொல்கிறார். இவ்விதமாக கிறிஸ்துவின் துதி நம்முடைய உதடுகளால் தேவனை சபையில் துதிக்க வேண்டும். இப்படியாக நாம் எப்போதும் கர்த்தரை துதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.