தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 57:14
வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் பொல்லாத கிரியையை கர்த்தர் ஒழிய பண்ணுகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நித்திய ஆசீர்வாதங்களுள்ளவர்களாக்குகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 21: 7-10
ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
மேற்குறிக்கபட்ட கர்த்தருடைய வார்த்தையின் படி தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவை நம்முடைய உள்ளத்தில் நித்நிய ஆசீர்வாதத்தினால் ஆசீர்வாதமாக்கி; அவரை மகிழ்ச்சியினால் பூரிப்பாக்கும் போது; அவர் நம்முடைய வாழ்வில் ராஜாவாக அபிஷேகம்பண்ணபட்டவராக கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறார். உன்னதமன தேவனுடைய தயவினால் அசைக்கப்படாதிருக்கிறார் என்பதும் முக்கியமான தேவனுடைய கிருபையாயிருக்கிறது. இவ்விதமான கிருபையினால் கிறிஸ்துவின் கை அவர் சத்துருக்களெல்லாரையும் எட்டி பிடிக்கும், அவர் வலதுகரம் அவரை நம் உளள்ளத்தில் இருக்கிற பகையாளிகளை கண்டு பிடிக்கும். அவர் கோபத்தின் காலத்திலே அந்த பகையாளிகளை அக்கினிசூளையாக்கி போட்டு; அவர்களை தமது கோபத்திலே அழித்து; அவருடைய வார்த்தையாகிய அக்கினியை அனுப்பி அவர்களை பட்சிக்கிறார். இவ்விதமாக கர்த்தர் செய்து அந்த பொல்லாத கனியை பூமியிலிராதபடி அழித்து, அந்த பொல்லாத சந்ததியை மனுபுத்திரரில்லாதபடி (இரட்சிக்கபட்டவர்களில்) ஒழியப்பண்ணுகிறார். அதனைக்குறித்து சொல்லப்படுவது கிறிஸ்துவின் ராஜ்யம் நம்மிடத்தில் வெளிப்படுவதற்கு தடையாக
சங்கீதம்21:11
அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
மேற்கூறிய பிரகாரம் சத்துரு கிரியைகள் நம் உள்ளத்தில் நடப்பிக்கும் போது கர்த்தர் அவர்களை இலக்காக வைத்து, அவருடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு எதிரே விடுகிறார். ஆதலால் நாம் கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்க பண்ணவேண்டியதாவது; கர்த்தாவே உம்முடைய பலத்தால் என் உள்ளத்தில் எழுந்தருளும்; அப்பொழுது உமது வல்லமையை பாடிக் கீர்த்தனம் பண்ணுவோம் என்று கர்த்தரை ஸ்தோத்தரித்தவர்களாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.