தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 71:14

நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நித்திய ஆசீர்வாதங்களுள்ளவர்களாக்குகிறார்.

ஏசாயா 42:7 

கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பரலோகத்துகுரியவர்களாக மட்டும் விளங்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 21:1-6

கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)

உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.

உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.

அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

மேற்கூறபட்ட வசனங்கள் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் கூறபடுகிறது.  அதென்னவெனில் சபையாம் ஜனங்கள் தேவனிடத்தில் கிறிஸ்துவை போற்றி புகழுகிறார்கள் என்பது குறிக்கப்படதக்கது.  மேலும் தேவனுடைய வல்லமையினால் மாத்திரம் ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார் ; அவருடைய இரட்சிப்பினால் எவ்வளவாய் களிகூருகிறார் என்பதும்; தேவன் தம்முடைய மனவிருப்பத்தின்படி அவருக்கு நம்மில் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறார்.  மேலும் உத்தம ஆசீர்வாதங்களோடு அவருக்கு தேவன் எதிர்கொண்டு வந்து அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறார் என்பதும்; அவருக்கு தீர்க்காயுசை கட்டளையிட்டார்.  பிதாவாகிய தேவனுடைய இரட்சிப்பினால் கிறிஸ்துவின் மகிமை நம்மில் பெரியதாயிருக்கிறது.  மேன்மையும், மகத்துவத்துவத்தையும் அவருக்கு அருளுகிறார்;  அவரை நித்திய ஆசீர்வாதங்களுக்குள்ளாக்கி; அவரை தேவனுடைய மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறார். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களும் கிறிஸ்து நம்மில் பெலன் கொள்ளும்போது நமக்கு தேவனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.  இப்படியாக தேவனால் உள்ள ஆசீர்வாதங்களை கிறிஸ்துவில் சுதந்தரிக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.