தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 145:19
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவன் தருகிற தண்டனையை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் சாவை ஜெயிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 33:23-26
ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
மேற்கூறபட்டிருக்கிற வசனங்களில் நம்முடைய பொல்லாத செய்கைகளினால் கர்த்தர் நம்மை தண்டனைகளினால் முத்திரைப்போட்டு பலவித நோய்களினால் தண்டிக்கும் போது நம்முடைய ஜீவன் அப்பத்தையும், ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும். அப்போது ஆயிரத்தில் ஒருவராகிய சமாசிபண்ணுகிற தூதனானவர் (கிறிஸ்து) மனுஷனுக்கு தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அனுசாரியாயிருந்தாரேயாகில் அவனுக்கு இரங்கி, மனுஷன் படுகுழியில் இறங்காதபடிக்கு, தேவனிடத்தில் நமக்காக வேண்டுதல் செய்து நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை கண்டுபிடித்தேன் என்பார். அவ்விதம் கர்த்தர் நம்மை பாவம், அக்கிரமம், மீறுதல் இவற்றிலிருந்து மீட்கும்போது நம்முடைய மாம்சம் வாலிபத்தில் இருந்ததை பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வால வயது நாட்களுக்கு திரும்புவான். அப்போது அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும் போது, அவன் அவருடைய சமூகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன் மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். அப்போது அவன் மனுஷரை நோக்கி சொல்வது
யோபு 33:27-30
அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
மேற்கூறிய வார்த்தைகளை கூறிவிட்டு அவன் யோபிடம் சொல்வது
யோபு 33:31-33
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
மேற்கூறபட்ட வார்த்தைகளை எலிகூ யோபிடம் கூறுகிறான். பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் தேவன் நம்மை தண்டித்து எவ்விதத்தில் இரட்சிக்கிறார் என்று கூறபடுகிறது. அல்லாமலும் நம்முடைய ஆத்துமாவை சாவுக்கு ஒப்புக்கொடாமல் ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறார் என்பதனை உணர்ந்துக்கொண்டு கர்த்தர் நம்மை தண்டிக்கும் போது தண்டனையை அலட்சியம் ஆக்காமல் நம்முடைய உள்ளம் உணர்வடைந்து அவருக்கு சித்த்தமானதை நடப்பித்தால் கர்த்தர் நம்மை எல்லா தீமையினின்றும் காத்துக்கொள்வார். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.