தேவனுக்கே மகிமையுண்டாவதாக
பிலிப்பியர் 1:21
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் சாவை ஜெயிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவே என்றென்றைக்கும் நீதிமானாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 33:1-22
யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
மேற்கூறபட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளில் எலிகூ யோபிடம் சொல்வதெல்லா வார்த்தைகளிலும், கர்த்தர் எல்லாரிலும் பெரியவரும், உயர்ந்தவராயிருக்கிறார் என்பதும், அவர் மனுஷர்களுடைய ஆத்துமாவை படுகுழிக்கும், அவர்களுடைய ஜீவனை பட்டய வெட்டுக்கும் தப்புவித்துக்கொள்ளும்படியாகவும், அவர்களுடைய எல்லா பொல்லாத செய்கைகளை விட்டு நீங்கவும், அவர்களுடைய பெருமையை அடக்கும்படியாகவும், கனநித்திரை அவர்கள் மேல் வரவைத்து, அவர்கள் தங்கள் படுக்கையின் மேல் அயர்ந்திருக்கையில், இராக்காலத்து தரிசனமான சொப்பனத்திலே அவர்கள் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, தண்டனையினாலே முத்திரைப் போடுகிறார். மேலும் மனுஷர்கள் தங்கள் படுக்கைகளிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான். அல்லாமலும் மனுஷர்களுடைய ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கிறது. அல்லாமலும் அவர்களுடைய மாம்சம் அழிந்து, மூடப்பட்டிருக்கிற அவன் எலும்புகள் வெளிப்படுகிறது. அவ்விதமாக மனுஷனுடைய ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது. ஆதலால் பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் மனுஷர்களை தங்கள் பொல்லாத செய்கைகளினால் கர்த்தர் வலுமையாய் தண்டித்து அவன் ஆத்துமாவை பதாளத்துக்கும், அவன் ஜீவனை சாவுக்கும் சமீபிக்கப்பண்ணுகிறார் என்பதனை உணர்ந்து நம்முடைய பொல்லாத நடத்தைகளை விட்டு விலகி கிறிஸ்துவின் மீண்டெடுப்பாகிய விலையேறப்பெற்ற இரத்தத்தால் சகல பாவங்களை விட்டு விலகி, நம்முடைய ஆத்துமா பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாகி இரட்சிக்கப்பட்டு, நம்முடைய பிராணனை கிறிஸ்துவின் ஜீவனால் சாவை ஜெயித்து என்றென்றும் கிறிஸ்துவோடு வாழ வேண்டும். இப்படியாக கிறிஸ்துவின் ஜீவனால் சாவை வெல்லும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.