தேவனுக்கே மகிமையுண்டாவதாக

 சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஏழை எளிய பிள்ளைகள், விதவைகள், திக்கற்றவர்களுக்கு உதவியாயிருக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் அந்நிய ஸ்திரீ(உலக சபை) யின் மேல் மயங்க கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 31:16-23 

எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,

தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?

என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன்.

ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,

அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,

ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,

என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.

தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.

மேற்கூறபட்டிருக்கிற வசனங்களை நாம் மீண்டும் தியானிக்கையில் யோபு கூறுவது எளியவர்கள், விதவைகள், தாய் தகப்பனில்லாத பிள்ளை இவர்களுக்கெல்லாம் கொடாமல் தனியே சாப்பிடவில்லை என்றும். அவர்களையெல்லாம் நான் என் சிறு வயது முதல் தாய் தகப்பனிடத்தில் வளர்ந்தது போல் வளர்த்தேன்.   மேலும் அவன் சொன்னது என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு கைலாகு கொடுத்தேன். உடுப்பில்லாமல் மடிந்து போகிறவனும், வஸ்திரம் இல்லாமல் இருக்கிறதையும் நான் கண்ட போது என் ஆட்டு மயிர் கம்பிளியினால் அனல் கொண்டதினால் அவன் இடை என்னை புகழாதிருந்ததும், ஒலிமுக வாசலில்  தனக்கு செல்வாக்கு உண்டென்று கண்டதினால் நான் திக்கற்றவனுக்கு விரோதமாய் கைநீட்ட வில்லை என்கிறான்.  அப்படி தான் கைநீட்டி இருந்தால் தன் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து தன் புயத்து எலும்பு முறிந்து போவதாக என்கிறான்.  இவ்விதமாக கர்த்தர் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும் எனக்கு பயங்கரமாயிருந்தது என்கிறான். 

பிரியமானமானவர்களே,  மேற்கூறபட்ட வசனங்கள் கர்த்தர் நமக்கு யோபுவை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஏனென்றால் நம்முடைய வாழ்வில் நாம் ஏழைகளிடமும், விதவைகளிடமும், திக்கற்ற பிள்ளைகளிடமும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் நமக்கு எடுத்துக் விளக்கி காட்டுகிறார்.  அவ்விதம் தேவனுக்கு பிரியமான காரியங்கள் செய்யாமல் இருப்போமானால் அவர்களின் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, புயத்து எலும்பு முறிந்து விழும் என்கிறார்.  ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால் அவருடைய பயங்கரமான ஆக்கினை தீர்ப்பிலிருந்து தப்புவிக்கப்படுவோம்.  இவ்விதமாக தேவனின் ஆக்கினை தீர்ப்பிலிருந்து தப்புவிக்கப்படும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.