தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11 கொரிந்தியர் 5:6,7 

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தன்னை தான் நீதிமான் என்று கருதக்கூடாது.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களை ஒரு போதும் அற்பமாக நினைக்கவோ, பேசவோ கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 30:11-19 

நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.

வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.

என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.

பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.

பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.

ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.

இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.

நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.

சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.

மேற்கூறபட்ட வசனங்களில் யோபு தொடர்ந்து கூறியவைகள் கொடுக்கப்படுகிறது.  இதனை நாம் கருத்தில் கொண்டால் அவன் கர்த்தரிடத்தில், மற்றவர்கள் அவனை வழிதப்பப்பண்ணுகிறார்கள் என்றும்; ஆதலால் அவன் ஆத்துமா அவனில் முறிந்து போயிற்று என்றும்; உபத்திரவத்தின் நாட்கள் அவனை பிடித்துக்கொண்டது என்றும்; இன்னும் அநேக காரியங்களை கூறிவிட்டு அவன் கர்த்தரிடத்தில் சொல்கிறான் 

யோபு 30:20-31 

உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.

என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.

நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.

சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,

துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.

நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.

வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.

நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.

என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.

என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.

மேற்கூறபட்ட வார்த்தைகளையெல்லாம் தேவனை நோக்கி சொல்லி, தன்னை நீதிமான் என்று நியாயப்படுத்திக் கொள்கிறான். 

பிரியமானவர்களே, முன்கூறியது போல் நம்மிலும் அநேகர் இன்னும் தான் செய்கிறது நீதியும், நியாயமுமாயிருக்கிறது என்று தன்னை தான் திருப்தியாக்கி நியாயப்படுத்தி, தங்கள்  ஆத்துமா பாதாளத்தில் படுக்கை போட்டிருக்கிறது தெரியாமல், ஆவிக்குரிய கண்கள் அடைக்கப்பட்டவர்களாய் இருந்தும் தங்களை பரிசுத்தவான்கள் என்று நினைத்து தங்களை குறித்து தப்பான எண்ணங்கொண்டிருக்கிறார்கள்.  ஆதலால் இதனை வாசிக்கிற அன்பான சகோதர, சதோதரிகளே நம்மை நாமே நீதிமான் என்று தீர்த்துக்கொள்ளாதபடி, தேவனுடைய நீதி, நியாயம் என்ன என்று அறிந்து அவர் கட்டளை, கற்பனை, நியாயங்கள் ஏற்றுக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.