தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 45:13

நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் என்றைக்கும் தேவசாயலை தரித்தவர்களாக காணப்பட வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கர்த்தருடைய  நியாயத்தின் பிரகாரம் நம்மை அனுதினம் சீர்திருத்த வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 29:12-25 

முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.

நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.

நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.

நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.

நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.

என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.

என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.

எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.

என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.

மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.

நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.

அவர்கள் வழியே போக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

மேற்கூறபட்ட வசனங்களில் யோபுவின் பிரசங்க வாக்கியங்களை தொடர்ந்து நாம் தியானிக்கும் போது, அவன் அநேக ஜனங்களின் இரட்சிப்புக்கு காரணமாய் வாழ்ந்தேன் என்றும், நீதி அவனுக்கு உடுப்பாகவும், நியாயம் சால்வையும், பாகையுமாய் இருந்ததாகவும், குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்கு காலுமாயிருந்தேன் என்றும் எளியவர்களுக்கு தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்து பார்த்தேன் என்றும்; அல்லாமலும்  அவனிடத்தில் இருந்த தேவ பெலனால் அநேகருக்கு ஒரு புதுமை போல செயல்பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு ஆறுதலாக இருந்ததால்; அவன் சொல்வது எனக்கு செவிக்கொடுத்து பேசாமலிருந்தார்கள்; என் ஆலோசனையை கேட்டு மவுனமாயிருந்தார்கள்.  என் பேச்சுக்கு பேசாமலிருந்தார்கள்;  என் வசனம் அவர்கள் மேல் துளிதுளியாய் விழுந்தது.  மழைக்கு காத்திருக்கிறவர்கள் போல் எனக்கு காத்திருந்து; பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள் போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.  ஆதலால் நான் அவர்களை பார்த்து நகைத்தாலும், அவர்கள் துணிகரங் கொள்ளவில்லை. என் முகக்களையை மாற செய்யவும் இல்லை.  அவர்கள் வழியே போக சித்தமாயிருந்த போது, நான் அவர்களுக்கு தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப் போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுப்பண்ணுகிறவனைப் போலும் இருந்தேன். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட யோபுவின் பிரசங்க வசனங்கள் நமக்கு திருஷ்டந்தத்திற்கென்று கொடுக்கப்பட்டவைகள்.  அவைகள் என்னவென்றால் நாம்  முந்தின நாட்களில் எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் என்றன்றைக்கும் அப்படியே பூமியில் யாரும் வாழமுடியாது.  ஏனென்றால் கர்த்தர் நியாயாதிபதி.  அவர் நீதிபரர், அவர் நீதி ஒரு போதும் மாறி போகாது; மற்றும் அவர் ஞானம் அளவிட முடியாது; அவர் ஞானத்தின் ரகசியத்தை யாரும் கண்டுக்கொள்ள முடியாது.  அவர் மனுஷனுக்கு அவரவர் செய்கைகளுக்கேற்ற பலனை தந்து நீதிக்கு சரிக்கு சரிகட்டுகிறவர்.  அவர் நியாயத்தை நூலும், நீதியை தூக்கு நூலுமாக வைக்கிறவர்.  அவரிடத்தில் ஒன்றும் மறைக்கவோ  மறுக்கவோ முடியாது.  ஆதலால் நாம் நீதிமான்கள் என்று நினைத்துவிடாமல், கர்த்தரால்  சிறைபடுத்தபட்டிருக்கிற நம்முடைய ஆத்துமா பாவம், அக்கிரமம், மீறுதல்கள் இவற்றிலிருந்தெல்லாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு விடுதலையாகி கிறிஸ்துவின் ஜீவனடைந்து அவர் சாயலடையும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.