10 04 2023

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 8:7

ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கர்த்தருடைய  நியாயத்தின் பிரகாரம் நம்மை அனுதினம் சீர்திருத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவாகிய பரலோக ஞானமும் புத்தியும் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானிப்பது என்னவென்றால் 

யோபு 29:1-11 

பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:

சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.

அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.

அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.

என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.

நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,

வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.

பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.

பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.

என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

மேற்கூறபட்ட வசனங்களில் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது; சென்று போன மாதங்களிலும், தேவன் தன்னை காப்பாற்றி வந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும் என்றும், அப்போது அவர் தீபம் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளை கடந்து போனேன் என்றும்  தேவனுடைய இரகசியச் செயல் அவனுடைய கூடாரத்தின் மேல் இருந்தது என்றும்; அப்பொழுது சர்வ வல்லவர் என்னோடிருந்தார் ; என் பிள்ளைகள் என்னை சூழ்ந்திருந்தார்கள்.  என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடி வந்தது; அந்தச் செல்வ நாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.  அந்த நாட்களில் அவனை மற்றவர்கள் கண்டால் தன்னை மதிப்பதையும் பல விதத்தில் ஜனங்கள் அவனுக்கு கீழ்படிந்ததையும், தன்னை பார்க்கிறவர்கள் தன்னை பாக்கியவான் என்று கூறினதையும் கூறுகிறான்.   

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில், நம் அநேகருடைய வாழ்வில் கர்த்தர் நம்மை ஒன்றுக்கும் குறைவுபடாமல் ஆசீர்வதித்து வந்தார் என்றால் நம்முடைய நீதியல்ல அதற்கு காரணம் என்றும்; கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற இரக்கம் என்பதனை உணர்ந்துக்கொண்டு, கஷ்டங்கள் வரும் போது தன்னுடைய நீதியால் இத்தனை வருஷம் ஆசீர்வாதமாக இருந்தேன் என்று நினைக்காமல், நம்முடைய உள்ளத்தின் மாறுபாடுகளை ஒவ்வொன்றாக சோதித்தறிந்து, நம்மை சீர்படுத்திக்கொண்டால் நலமாயிருக்கும். இப்படியாக நம்முடைய சீர்திருத்துதல் தான் நம்முடைய சமாதான வாழ்க்கைக்கும் ஆசீர்வாதத்திற்கும் காரணமாய்  இருக்கும்.  இப்படி நம்முடைய சமாதானத்தை பெற்றுக் கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.