தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம்16:8 

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை குவித்து வைக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் பெற்றுக்கொள்கிற ஆலோசனையை தடைசெய்யக் கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 27:11-14 

தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.

இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?

பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,

அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.

மேற்கூறப்பட்ட வசனங்களில்  யோபு சூகியனான பில்தாதிடம் கூறிய பிரசங்க வாக்கியங்கள் தொடர்ந்து சொல்வது தேவனுடைய கரத்தின் கிரியைகளை உபதேசிப்பேன் என்று சொல்லி, சர்வ வல்லவரிடத்தில் இருக்கிறதை மறைக்கமாட்டேன் என்றும் நீங்கள்  எல்லாரும் அதனை கண்டிருந்தும் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? என்று பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வ வல்லவரால் அடைகிற சுதந்தரமும்; அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவனுடைய  கர்ப்பப் பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.  மேலும் அவன் சொல்வது 

யோபு 27:15-23 

அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.

அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.

அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.

அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.

வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.

கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.

அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.

ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.

மேற்கூறிய வசனங்களில் யோபு கூறியவைகள் எல்லாம் தனக்கு நேரிட்டதை குறித்து  தன் உள்ளத்தில் கலக்கத்தோடு இவைகளை கூறுகிறான். 

பிரியமானவர்களே, இப்படிதான் நாமும் நம்மை தன்னைத்தான் சோதித்தறிந்து தன்னில் இருக்கிற குறைவை மாற்றாமல் நம்மிடத்தில் குற்றம் ஒன்றும் இல்லை என்று நினைத்து விடுவோம்.  அவ்விதம் நினைக்கிறதினால் ஏதோ நமக்கு வரும் தீமைகள் துன்மார்க்கனுக்கு உண்டாகிற கஷ்டம் நமக்கு வருகிறது என்று நினைத்து ஏதோ நம்முடைய வாயால் வார்த்தைகளை கொட்டி அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை குவித்து விடுகிறோம்.  ஆதலால் பிரியமானவர்களே கர்த்தருக்குள் எப்போதும் நம்மை நாமே சோதித்து அறிந்து குறைவை கர்த்தரிடத்தில் அறிக்கைப்பண்ணி ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.