தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யாக்கோபு 4:2-4
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் பொறுமையோடு உபத்திரவத்தை சகித்து கிறிஸ்துவினால் ஜெயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அக்கிரமத்தின் செயல்களை முற்றிலும் நம்மை விட்டு அகற்ற வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 16:1-3
அதற்கு யோபு பிரதியுத்தரமாக:
இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
மேற்கூறப்பட்ட வசனங்களில் எலிப்பாஸ் கூறிய கர்த்தரின் வார்த்தைகளுக்கு யோபு பிரதியுத்தரமாக சொல்லிய வசனங்கள் என்னவென்றால் இப்படி நான் அநேக காரியங்களை கேட்டிருக்கிறேன்; நீங்களெல்லரும் அலட்டுண்டாக்கிற தேற்றரவாளர் என்று அநேக தேவையற்ற வார்த்தைகளால் மறுபடிக் கொடுக்கிறான். பின்னும் அவன் சொல்ல துணிந்த வார்த்தை என்னவென்றால்
யோபு 16:4
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.
அவ்விதம் சொல்லிய யோபு சொல்கிறான்; நான் என் வாயின் வார்த்தைகளால் உங்களுக்கு திடன் சொல்வேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தும் எனக்கு என்ன ஆறுதல்? இப்போது என்னை இளைத்துப்போக பண்ணினார் என்று பின்னும் அநேக வார்த்தைகளால்
யோபு 16:8-16
நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள்; நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
கர்த்தரை குற்றம் சாட்டிக் கூறுகிறான். பின்னும் அவன் சொல்வது
யோபு 16:17-22
என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராத வழியே போவேன்.
மேற்கூறபட்ட வார்த்தைகளாவது அவன் கைகளில் கொடுமை இல்லாமலிருந்த போதிலும், அவன் ஜெபம் சுத்தமாயிருந்த போதிலும் தேவன் அவனை தண்டிக்கிறார் என்றும், இன்னும் அநேக வேதனைக்குரிய வார்த்தைகளால் தன் வருத்தத்தை எடுத்துகூறி குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பி வராதவழியே போவேன் என்கிறான்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகளை திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் நாமும் அப்படி தான் நம்முடைட கைகளில் கொடுமை இல்லை என்றும், நம்முடைய ஜெபம் சுத்தமாயிருக்கிறது என்றும் நமக்குள் நினைவுக்கொள்கிறோம். நாம் எவ்வளவு கர்த்தருக்கு பிரியமாய் நடக்கிறோம் என்று நினைக்கவே மாட்டோம் அல்லாமல் கொஞ்சம் பக்தி உள்ளவன், தன் வாழ்வில் கஷ்டங்கள் நேரிடும் போது, கர்த்தரிடத்தில் கேள்வி கேட்க துணிவுக் கொள்கிறோம். அதுவுமட்டுமல்லாமல் ஏதோ தேவன் தவறு செய்து விட்டார் என்று தப்பாக நினைத்து இருதயம் வேண்டா வெறுப்போடேபேசி விடுகிறோம். ஆதலால் நாம் ஒருபோதும் அப்படி செய்யாமல் பொறுமையோடு உபத்திரவத்தை சகித்தால் தேவன் நம்முடைய குற்றத்தை நமக்கு எடுத்துகாட்டி, நம்மை பாதாளம், மரணம் இவைகளிலிருந்து கிறிஸ்து மூலம் இரட்சித்து உயர்த்துவார். இப்படியாக நம்மை கர்த்தரின் சமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.