தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 43:15
நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்கு தேவன் நம்முடைய சிருஷ்டிகர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் போதும் ஆவிக்குரிய பெருமை வராமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 15:1-7
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
மேற்கூறபட்ட வசனங்களில் யோபு பேசினதை கேட்ட தோமானியனான எலிப்பாஸ் யோபுவுக்கு பிரதியுத்தரமாக ஞானவான் காற்றை போன்ற நியாயங்களை சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல் காற்றினால் நிரப்பி பிரயோஜனமற்ற வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வார்த்தைகளினாலும் தர்க்கிக்கிறாய் என்றும், யோபு தானே பயபக்தியை வீணென்று சொல்லி ஜெபதியானத்தை குறையப்பண்ணுகிறான் என்றும்,யோபுடைய, வாயே அவனை குற்றவாளியென்று தீரக்கிறதென்றும், அவன் அக்கிரமங்களை அவனை சொல்லிக் காட்டுகிறான் என்றும், அவன் உதடுகளே அவனுக்கு விரோதமாக சாட்சியிடுகிறதினால், அவன் சிநேகிதனாகிய எலிப்பாஸ் கேட்கிறான் பர்வதங்களுக்கு முன்னே உருவாக்க பட்டீரோ மற்றும்
யோபு 15:8-12
நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ?
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
மேற்கூறபட்ட வசனங்கள் விளக்குகிற தெளிவு என்னவென்றால் சிநேகிதர்கள் பேசின காரியங்கள் அவனுக்கு அற்பமான காரியமாக காணப்பட்டதென்றும்; யோபுடைய இருதயம் அவனை வேறெங்கெல்லாமோ கொண்டு போகிறதால்; அவன் சிநேகிதர்களை கண்கள் நெறித்துப் பார்க்கிறது. ஆதலால் சிநேகிதன் சொல்கிறான்
யோபு 15:13-17
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
மேற்கூறபட்ட வார்த்தைகளால் எல்லாம் பேசுகிறான். ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒரு போதும் நம்முடைய இருதயத்தை தேவனைவிட்டு தூர அலையப் பண்ணக்கூடாது; நாம் ஒரு போதும் தேவனை சோதிக்கக்கூடாது அவருக்கு முன்பாக யாருக்கும் நிற்க முடியாது. ஏனென்றால் அவர் அவ்வளவு ஞானத்தில் ரகசியமான ஆழமுடையவர். அவருடைய கண்களுக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை.தேவன் நம்முடைய சிருஷ்டிகர், நாம் அவர் சிருஷ்டிகளாக இருக்கிறோம் என்பதனை உணரந்துக்கொண்டு, எப்போதும் அவருக்கு பயந்து அஞ்சி தாழ்மையோடும், கீழ்படிதலோடும் நடக்கும்படியாக நம்மை கிறிஸ்தேசுவுக்குள்ளாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.