தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தருக்கு பயந்து நடுங்குகிறவர்களாக காணப்பட வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய கைகள் சுத்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

யோபு 23:1-8 

யோபு பிரதியுத்தரமாக:

இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.

நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து,

என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.

அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.

அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.

அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.

இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தோமானியனான எலிப்பாஸ் கூறிய அறிவரைகளுக்கு யோபு பிரதியுத்தரமாக சொல்வது என்னவென்றால் கர்த்தரை குறித்து குற்றம் சொல்கிறதை வாசிக்க முடிகிறது.  அப்படி சொன்ன யோபு சொல்கிறான் சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம் என்றும்; அவ்விதம் வழக்காடும் போது நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு தப்புவித்துக் கொள்ளலாம் என்கிறான்.  மேலும் அவன் கூறுகிற வார்த்தையாவது நான் முன்னாக போனாலும் அவர் இல்லை; பின்னாக போனாலும் அவரை காணேன் என்றும் 

யோபு 23:9-10

இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

யோபு 23:9-10 ல் கர்த்தரை பரிகசிப்பது போல் பேசி; மற்றும் அவன் கர்த்தருக்கு பிரியமாக நடந்து கொண்டேன் என்று 

யோபு 23:11-12

என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.

அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

யோபு 23:11-12-ல் கூறி விட்டு அவன் சொல்கிறான் அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரை திருப்பதக்கவன் யாருமில்லை என்றும்;  அவர் தமக்கு சித்தமானதையெல்லாம் செய்கிறார் என்றும்; தனக்கு குறித்திருக்கிறதை நிறைவேற்றுவார் என்றும்; இப்படியாக அநேக காரியங்கள் அவரிடத்தில் உண்டு என்று சொல்லி கரத்தரை குற்றம் பார்க்கிறான்.  ஆகையால் அவருக்கு முன்பாக கலங்குகிறேன் என்றும்; நான் சிந்திக்கும் போது பயப்படுகிறேன் என்றும் சொன்னதுமன்றி அவனுடைய இருதயத்தை இளக்கரிக்கபண்ணினார்; சர்வ வல்லவர் என்னை கலங்க பண்ணினார்.  தன்னுடைய வாழ்க்கையை அந்தகாரத்தால் மூடியிருக்கிறார் என்கிறான்.  

பிரியமானவர்களே,  இப்படியாக தான் நாமும் நம்மை நீதிமான்கள் என்றெண்ணி கர்த்தர் நம்மை நியாயம் தீர்த்து தண்டிக்கும் போது, நம்முடைய தப்பிதங்களை எண்ணாமல் கர்த்தர் தவறாக தீர்த்து விட்டார் என்று வாயால் தாராளமாக பேசுகிறவர்களும் உண்டு.  ஆனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது கர்த்தருக்கு தவறு வருவதற்கு அவர் மனுஷனல்ல; சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை கருத்தில் கொண்டு எப்போதும் அவருக்கு பயந்து நடங்குகிறவர்களாக இருக்க வேண்டும்.  இப்படியாக நடுக்கத்தோடு கர்த்தரை  தேடி நம்முடைய வாழ்வில் களிகூர்ந்து மகிழ்வோம். இப்படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.