தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 24:4,5
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய கைகள் சுத்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் ஜீவ ஒளியை அடைகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் யோபு கூறிய பதிலுக்கு தோமானியனான எலிப்பாஸ் சொல்வது என்னவென்றால் தேவன் பரலோகத்தின் உன்னதங்களில் இருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும் அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது என்றும் கூறிவிட்டு யோபுவிடம் கர்த்தரை பற்றி கூறிய காரியங்கள் சிலதை சொல்லி
யோபு 22:13-20
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
மேற்கூறிய வார்த்தைகளை சொல்லி; பின்பு யோபுவிடம்
யோபு 22:21-30
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.
மேற்கூறிய நல்ல ஆலோசனைகளையெல்லாம் சொல்லி விட்டு, அவ்விதம் செய்தால் மனுஷர் ஒடுக்கப்படும் போது திடபடகடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள். குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பி போவான் என்றான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது நம்மை கர்த்தர் நெருக்கும் போது, அதிலிருந்து தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டு பண்ணுவார். கர்த்தர் நம்மை நெருக்குகிறாரென்றால், நம்முடைய அக்கிரமம், பாவம், மீறுதல்கள் தான் இதற்கு காரணம் என்றுணர்ந்து நாம் சர்வ வல்லவரிடத்தில் மனந்திரும்பினால் மீண்டும் நம்மை கட்டுவார்; அப்போது நாம் இழந்த ஆசீர்வாதங்கள் மீண்டும் சுதந்தரிப்போம் என்ன நிச்சயம் நமக்குள்ளில் வரும்; நாம் ஒரு காரியத்தை நிர்ணயம் பண்ணினால் அது நமக்கு நிலைவரப்படும். மற்றும் மனுஷர் ஒடுக்கப்படும் போது திடப்படகடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள். குற்றமற்றிராதவர்களையுங்கூட தப்புவிப்பார். நம்முடைய கைகளில் சுத்தம் இருக்குமானால் நாம் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி வரும் போது அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.