தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் இருளில் நடவாமல் ஜீவ ஒளியில் நடப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சகோதரர்களுக்கு ஆறுதல் உண்டாக பேசுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 22:1-11
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளில் யோபு அவன் சிநேகிதனாகிய சோப்பாரிடத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு தோமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரம் சொல்லுவது என்னவென்றால் யோபு தனக்கு தான் பிரயோஜனமாயிருக்கிறான் என்றும், அப்படியானால் அவன் தன்னை நீதிமான் என்று எண்ணுகிறதினால்; நீர் நீதிமானாயிருக்கிறதினால் சர்வ வல்லவருக்கு நன்மை உண்டாகுமோ என்றும், அவன் தன்னையே உத்தமன் என்று எண்ணுகிறான் என்றும்; அப்படியாக தன்னை தான் உத்தமன் என்று எண்ணிக் கொள்ளுகிறதினால் கர்த்தருக்கு ஆதாயமாயிருக்குமோ? என்றும்; பின்னும் அவன் யோபுவை குறித்து சொல்வது ; உம்முடைய பொல்லாப்புப் பெரியது என்றும் கூறுவதன் காரணம் யோபு மீண்டும் மீண்டும் தன்னை தாழ்த்தாமல் பேசிக்கொண்டிருப்பதினால் அவன் செய்கிற அக்கிரமத்துக்கு முடிவில்லை என்றும், பின்னும் யோபின் கிரியைகளை குறித்து சொல்லப்படுவது முகாந்தரமில்லாமல் சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களை பறித்துக்கொண்டதும், விடாய்த்தவனுக்கு தாகத்துக்கு தண்ணீர் கொடாமல் இருந்ததும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமல் போனதையும், பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாக்கினதால்; பலவான் அதில் குடியேறினான் என்றும், விதவைகளை வெறுமையாய் அனுப்பி விட்டதையும்; தாய் தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டதையும்; இவையெல்லாவற்றின் நிமித்தமும் கண்ணிகள் யோபுவை சூழ்ந்திருக்கிறது என்றும் அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மை கலங்கபண்ணி; நீர் பார்க்ககூடாதபடிக்கு இருள் வந்தது என்றும்; ஜலபிரவாகம் உம்மை மூடுகிறது என்றும் கூறுகிறான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்பதனை புரிந்து கொண்டு, அவற்றில் எப்படிபட்ட எல்லாம் குற்றங்கள் யோபுவிடத்தில் கூறப்படுகிறதோ, இவையெல்லாம் நம்மில் உண்டோ என்றும் நம்மை நாமே சோதித்து அறிந்துக்கொள்வது மட்டுமல்லாமல், ஜனங்களை ஆவிக்குரிய பாதையில் நடத்தி வராமல் நாம் நிர்விசாரமாக நடந்துக் கொண்ட வகையை ஒன்று சிந்தித்து மனந்திரும்பினால் மிகவும் நன்மையாக இருக்கும். என்னவென்றால் நம்மில் அவ்வித குறைகள் இருக்கிறதால் நம் ஆவிக்குரிய கண்கள் அடைக்கப்பட்டவர்களாய், கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நாம் நடவாமல் உலகமாகிய இருளில் நடக்கிறதால் ஜலபிரவாகமாகிய போராட்டம் நம்மை மூடியிருக்கிறது. இதிலிருந்து நாம் தப்புவதற்கு நம்மை கர்த்தரின் பாதத்தில் முழுமையாக தாழ்த்தி ஒப்புக்கொடுத்தவர்களாக கண்கள் திறக்கப்பட்டு, இருளில் நடவாமல் கர்த்தரின் வெளிச்சத்திலே நடந்து எல்லா போராட்டத்தையும் ஜெயிக்கும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.